Wednesday, October 04, 2006

புதுவயலில் உள்ள மேலப்பெருமாள் கோயில்.





புதுவயலில் உள்ள ஒரு கோயில் மேலப்பெருமாள் கோயில். அதன் அழகை இங்¢கு தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊரின் மேற்குப்புறம் உள்ள கோயில் இது. கிழக்குப் புறம் ஒரு பெருமாள் கோயில் உண்டு. அதற்கு கீழப் பெருமாள் கோயில் என்று பெயர்.
கோயில் தனியார் சொந்தமானது என்றாலும் கூட பொதுமக்களின் சொத்தாகப் பராமரிக்கப்படுவது இ¢ங்கு உள்ள சிறப்பு. இதில் ஒரு கோபால கிருஷ்ணரை எங்களின் முன்னோர் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிள்ளை பிறக்காதபோது ஒரு முறை இந்தக் கடவுளை இந்தக் கோயி¢¤லில் வைத்து வழிபட்டு, மண்சோறு சாப்பிட்டுக் குழந்தை பெற்றதாக எங்களின் வரலாறு நீள்கிறது.
கோயிலின் சிலைகள் அழகு. சுந்தரராஜப் பெருமாள் இருதேவியரின் இருக்கையோடு காட்சி தருகிறார். அடுத்து தாயார் சர்வ அலங்காரக் காட்சி, ஆண்டாளின் திவ்ய சொருபம். இவற்றோடு இங்கு ஒரு முனி கோயிலும் உண்டு.
கோயிலின் எதிரில் குளம் ஒன்றுண்டு. அதன் பிரதிபலிப்பில் கோயில் தெரிவது போல படம் எடுக்கப் பெற்றுள்ளது. வாருங்கள் புதுவயலுக்கு

Wednesday, May 17, 2006

இரண்டாம் கட்டு


இரண்டாம் கட்டு என்று சொல்லப்படுகிற பகுதியின் படம் இது. சூரிய ஒளி விழும் வகையில் காற்றோட்டத்துடன் கட்டப்பட்டுள்ள இப்பகுதி மிக அழகானது,

ஒரு தேக்குத்தூணின் வேலைப்பாடு



எம் இல்லம் முகப்பு (முன் பகுதி), பட்டாலை, வளவு, ஹால்வீடு, இரண்டாம் கட்டு, சமையல் கட்டு எனப் பல அடுக்குகளை உடையது, பட்டாலை என்ற ஒரு பகுதியில் உள்ள ஒரு தேக்குத்தூணின் வேலைப்பாடு மேல்படத்தில் உள்ளது.

பெரிய வீடுதான்



பெரிய வீடுதான்
ஆனால் இதில் நான்கில் ஒரு பங்கில் அதனுள் மூன்றில் ஒரு பங்கு எமக்குச் சொந்தம்
அப்படிச் சொந்தமான அறைதான் மேல் இருப்பது
நடுவில் பெல்ஜியம் கண்ணாடி
அதற்கு இரு பக்கங்களிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் ஜிமிக்கி அலங்காரத்துடன்
இதுவே உள் அறை
இதற்கு வெளியே ஒரு அறை உண்டு
அந்த அறை இதே அளவு உடையது
இந்த இரண்டு அறைகள் எமக்குச் சொந்தம்

புதுவயல்


புதுவயல்அருமையான ஊர்.
சுற்றிலும் முந்திரிக் காடுகள்
அதில் துள்ளி ஓடும் மான்கள்
புழுதி பறக்கும் வீதிகள்
மழையில் மண்வாசனை மணக்கும்
நீண்டு உயரும் புகைபோக்கிகள்
நெல் அரவை மில்களின் அணிவகுப்பு
உழைப்பாளிகளின் தலைக்கவசம் சாக்கு
வாய்க்கவசம் மரியாதையான பேச்சு
இப்படிப்பட்ட ஊர் என் சொந்த ஊர்

செட்டிநாட்டு மரபும் பண்பாடும் சமையலும் மணக்கும்
இந்த ஊரில்
கைலாச விநாயகர் கோயில்
மேலப் பெருமாள் கோயில்
கீழப் பெருமாள் கோயில்
காட்டுச் சிவன் கோவில்
எனப் பல கோயில்கள் உண்டு

இராமநாதன் செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
சரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளிஎனப் பல பள்ளிகள் உண்டு

வீதிகளில் பேர் பெற்றது நடுவீதி
இதனுள் ஒரு வீதியில்என் வீடு
அதுவே நீங்கள் பார்ப்பது