Sunday, June 06, 2010

சில வீதிகள்




இரட்டைப் பிள்ளையார்கோயில்


இரு பிள்ளையார் உள்ள கோயி்ல்இது,பயப்படும்படி எதாவது தோன்றினால் இந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்தால் சரியாகிவிடும்

கீழப்பெருமாள் கோயில்


புதுவயலில் உள்ள கிழக்குப்புறத்திலும்- மேற்குப்புறத்திலும் இரு பெருமாள் கோயில்கள் உண்டு, கிழக்குக் கோயில் கீழப் பெருமாள் கோயில் எனப்படும், தற்போது இதற்குத் திருப்பணி நடைபெற்று வருகிறது

அடைக்காத்தாள் கருப்பையா படைப்பு வீடு



புதுவயல் தெய்யனார் வகுப்புப் பங்காளிகள் கொண்டாடும் படைப்பு வீடு இதுஆண்டுக்கு ஒருமுறை கூடிப் படைக்கும் நடைமுறை இங்கு நடைபெற்று வருகிறது

பிள்ளையார் கோயில்







புதுவயலின் பிரதான தெய்வமாக விளங்குபவர் கைலாச


விநாயகர்இவரின் அருளால் புதுவயல் தொழில்நகரமாக மாறி வருகிறது
அழகான திருக்குளத்துடன் அமைந்துள்ள இக்கோயில் நகரத்தார் நடைமுறையில் உள்ளதுஇந்தக் கோயிலை ஒட்டி கடைவீதி அமைந்துள்ளது

புதுவயலில் உள்ள சில இடங்கள்




ஸ்ரீ சரஸ்வதி சாங்கம்
தாலம் புகழ் வித்யா சாலை புதுவயலில்
சாலச் சிறந்து தழைக்குமே சீலமிகு
தக்கார் பெரியார் சரஸ்வதி சங்கத்தார்
எக்காலும் போற்ற இனிது

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


ஸ்ரீசரஸ்வதி சங்கம்
தோற்றுவிக்கப் பட்ட நாள் 2271922
தோற்றியோர் திரு. சா. சிதம்பரம், திரு பெரி. சித. இராமசாமி, திரு. பெரி. அரு. பெரியகருப்பன்

ஏ. கே. செட்டியார் வருகை தந்து இந்த தொடக்கவிழாவை நடத்திச் சிறப்பித்தார்கள்



பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் 16.1.1933 அன்று ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை என்ற பெயரில் தொடக்கப் பள்ளிக் கூடம் துவங்கப்பட்டது.

1.7.1982 ஆம் ஆண்டு ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் மற்றொரு நிறுவனம் தொடக்கப் பெற்றது. இது தற்போது ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக வளர்த்தெடுக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீ சரஸ்வதி சங்கம் இலக்கியக் கழகமாக விளங்கியது. இச்சங்கத்தில் விடுதலைப்போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார், இரசிகமணி டி.கே. சி, பெரியார், கல்கி, ம. பொ. சி , நீலாம்பிகை அம்மையார், மு. வ., ஜெகவீர பாண்டியனார், டாக்டர் வ. சுப. மாணிக்கம், குன்றக்குடி அடிகளார், முரு. பழ. ரத்தினம் செட்டியார், கி. வா. ஜகந்நாதன், அ.சரவணமுதலியார், அ.ச.ஞானசம்பந்தம், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா போன்ற பலர் வருகை தந்துச் சிறப்புரை ஆற்றியுள்ளனர். இச்சங்கம் ஆண்டுதோறும் ஆண்டுவிழாவினை இலக்கிய விழாவாக இன்றுவரைக் கொண்டாடி வருகின்றது.


வெள்ளிவிழா மலர், பொன்விழா மலர் போன்றன இச்சங்கத்தின் விழாக்களின்போது வெளியிடப் பெற்றன. மேலும் இச்சங்கத்தின் சார்பாக உமையாம்பிகை நவரெத்தின ஆசிரியம், உய்யவந்த அம்மன் உத்தரவு போன்ற பல நூல்கள் வெளியிடப் பெற்றுள்ளன. இவ்வகையில் இச்சங்கம் பதிப்புப்பணியையும் செய்துள்ளது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் கொண்டு அக்காலத்தில் மேடை நாடகங்கள் அரங்கேற்றப் பெற்றுள்ளன. அக்காலத்தில் இந்நாடகங்கள் பெரும் புகழ் பெற்று விளங்கின.