Saturday, December 17, 2016

புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் முப்பெரும் விழா



புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் முப்பெரும் விழா 28.12.2016 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. ஸ்ரீசரசுவதி சங்கத்தின் 94 ஆம் ஆண்டுவிழா, ஸ்ரீசரசுவதி வித்தியாசாலையின் 84 ஆம் ஆண்டுவிழா, ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 13 ஆம் ஆண்டுவிழா ஆகியன இணைந்த முப்பெரும்விழா இதுவாகும். காலை 9.30 மணிக்கு ஸ்ரீசரசுவதி சங்க 84 ஆம் ஆண்டுவிழா நடைபெறுகிறது. தலைவர் இராம. இராமநாதன் செட்டியார் முன்னிலை வகிக்கிறார். செந்தூரான் கல்வி குழுமத்தின் சேர்மன் திரு. இராம.வயிரவன் அவர்கள் தலைமை ஏற்கிறார். சங்க ஆண்டறிக்கையை முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் வாசிக்கிறார். இவ்விழாவின் சிறப்புரையை முனைவர் மா. சிதம்பரம் (இணைப்பேராசிரியர், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி) நிகழ்த்துகிறார்.
முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீசரசுவதி வித்யாசாலை தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா தலைவர் சித. மெய்யப்பன் அவர்கள் தலைமையில்நிகழ உள்ளது. இவ்விழாவில் திரு. பெ. பழ.வி. பழ இராம வினைதீர்த்தான் அ்வர்கள் சிறப்புரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நன்றியுரையை திரு. இராம. பெரிய கருப்பன் ஆற்றுகிறார்.
பிற்கபல் 2.00 மணிக்கு ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறுகிறது. விழாவின் தலைமையை திரு. மு,க. இராமசாமி செட்டியார் அவர்கள் ஏற்கிறார்கள். திருமதி மு. க. முத்தையா அவர்கள் பரிசு வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்
சரசுவதி சங்கத்தார். புதுவயல்

Thursday, November 24, 2016

கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்


கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்

கம்பன் கழகம், காரைக்குடி
புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன் அவர்கள்
அன்புடையீர்
வணக்கம்

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணாக கல்யாண மண்டபத்தில் நிகழ்கின்றது.
கம்பன் கழகக் கொடைஞரான ஆலை அரசர் தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ~தமிழ்நாடு| இதழைத்தொடங்கி அதன்ஆசிரியராகவும் விளங்கி அரும்பணி ஆற்றிய கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் இவ்விழாவில் அறிமுகம் செய்யப் பெறுகிறது. (இந்நூலைத n;தாகுத்தவர் கருமுத்து தியாகராசனாரின் பெயரர் ஹரிதியாகராசன் ;ஆவார். இதனை வானதிப்பதிகப்பகம் வெளியிட்டுள்ளது.)
அனைவரும் வருக.
நிகழ் நிரல்
இறைவணக்கம் - திருமிகு கவிதா மணிகண்டன்
அவர்கள்
வரவேற்புரை திரு. கம்பன் அடிசூடி அவர்கள்
உரைக் கோவை நூல்வெளியீடு


- தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு
எஸ். பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே சத்ரபதி அவர்கள்
சிறப்புரை
திருமிகு இளம்பிறை மணிமாறன்அவர்கள்
ஏற்புரை திரு. ஹரி தியாகராசன் அவர்கள்
நன்றியுரை பேரா மு,பழனியப்பன்
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நன்றி
அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை அன்னைமெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
திரு ரவி அப்பாசாமி நிர்வாக இயக்குநர், அப்பாசுவாமி ரியல் எஸ்டேட்ஸ்
தி.நகர் சென்னை

Wednesday, November 23, 2016

பொன்விளையும் நகரம் புதுவயல்





   ஊருக்கு நடுவே ஊருணி. ஊருணிக் கரையில் கைலாசநாத விநாயகர் கோவில். கைலாச விநாயகர் கோவிலைச் சுற்றாமல் யாரும் ஊருக்குள் வரவும் முடியாது. ஊரை விட்டு வெளியில் செல்லவும் முடியாது.  முழு முதற்கடவுளான கைலாச நாத விநாயகரை முதலாக வைத்து வழிபடும் ஊராகப் புதுவயல் விளங்குகின்றது. இந்த ஊர் பதினாறு வட்டகையைச் சார்ந்த ஊராகும். இவ்வூரின் சிறப்பினை
செய்யோடு காற்று விளையாடிவரும் நகரம்,
திருமாது மனைகள்தொறும் திகழ்கின்றன நகரம்,
பொய்யாது மழை பொழியப் பொன்விளையும் நகரம் 
என்று பாடினார் கவியரசு கண்ணதாசன்.
கவியரசு சொன்ன சொல் மாறாமல் அப்படியே புகழ் பூத்து நிற்கிறது புதுவயல் நகரம்.  புதுவயல் வயல்களில் விளையும் நெற்பயிர்களில் காற்று புகுந்துவிளையாடும் நகரமாக, அரசி ஆலைகளில் பெருக்கத்தால் அனைத்து வீடுகளிலும் செல்வமகள் வீற்றிருக்கும் ஊராக, பொன்விளையும் நகரமாக புதுவயல் நகரம் சிறப்புற்று விளங்கி வருகிறது.
புதுவயல் பல ஊர்களின் தொகுப்பாக விளங்கியுள்ளது.  பழையூர்,  புதுவயல், நடராசபுரம் போன்ற பல ஊர்களின் தொகுப்பு நகரமாகப் புதுவயல் திகழ்கின்றது. தற்போது இதனுடன் சாக்கோட்டையும் இணைவு பெற்றுவிட்டது. புதுவயல் பேரூராட்சியின் பகுதிகளா இவை தற்போது திகழ்கின்றன.
இவ்வூரின் நடுவில் செல்லும் சாலை நடுவீதி என்றும் அதன் இருமருங்கும் செல்லும் வீதிகள் யெ.மு. வீதி என்றும், பங்களா ஊரணிச் சாலை என்றும் அழைக்கப்பெறுகின்றன. தற்பொழுது ஊர் பெருகி பற்பல தெருக்கள் அமைந்திருக்கின்றன.
    இவ்வூரில் இளையாற்றங்குடி பட்டணசாமியார், இளையாற்றங்குடி பெருமருதூருடையார், இளையாற்றங்குடி கிண்கிணிக்கூருடையார், வயிரவன் கோவில் தொய்யனார் வகுப்பினர், வயிரவன் கோயில் பெரிய வகுப்பினர், சூரக்குடி கோவில் பிரிவினர் , இரணிக்கோவில் பிரிவினர், மாத்;தூர்கோவில் மணலூர் பிரிவு, இலுப்பக்குடிக் கோவில் பிரிவினர் என்று பல்வகைப் பிரிவு சார்ந்த நகரத்தார் பெருமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் ஒற்றை வீட்டு நகரத்தார், நாட்டார், இசுலாமியர் ஆகியோரும் இணைந்து வாழும் ஒற்றுமை நகரமாக புதுவயல் நகரம் விளங்கி வருகின்றது.
தெய்வச்சிறப்பு   
இவ்வூரில் உள்ள கோயில்கள் பலவாகும். இருப்பினும் அருகில் உள்ள சாக்கோட்டை உமையாம்பிகை உடனாய வீரசேகரர், உய்யவந்தாளை முன்வைத்தே அனைத்துச் செயல்களையும் இவ்வூர் மக்கள் நடத்திக்கொள்கின்றனர். முழுமுதல் கடவுளான கைலாச விநாயகருக்கு வெள்ளி அங்கி, தேர் ஆகியன சிறப்பு சேரக்கின்றன. இவரின் ஆலயத்தில் நவகிரகங்கள், சிவ பார்வதி சன்னதி ஆகியனவும் உள்ளன. நகரக் கூட்டம், நகரப் பொதுமுடிவுகள் அனைத்தும் இக்கோயிலை முன்வைத்துச் செய்யப்பெறுகின்றன.  எங்கும் இல்லாத புதுமையாக இவ்வூரின் கிழக்கிலும், மேற்கிலும் இரு பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் அமைந்துள்ள கீழப்பெருமாள் கோவில் நவீனக் கட்டடக் கலையம்சத்துடன் தற்போது கட்டப்பெற்றுள்ளது. யெ.மு.பெரி, யெ.மு.வி.மு, யெ.மு.சொ. பழ, பெ.ப.வி.பழ, பெ.ப.வி.வீர. பழ, பெ.ப.வி. அரு.ராம., பெ.ப.விசித, கும.சுப. ராம ஆகிய குடும்பத்தார் இக்கோயிலைப் புதிதாக்கியும் நிர்வகித்தும் வருகிறார்கள். இப்பெருமாளின் நாமம் ரங்கநாதர் என்பதாகும். இங்கு சக்கரத்தாழ்வார், இராமர், ஆண்டாள், தாயார், அனுமன் போன்றோர் சன்னதிகளும் உள்ளன. மேலப்பெருமாள் கோவிலை அ.சு.பழ.வீர.இராம குடும்பத்தார் திருப்பணிகள் செய்து நிர்வகித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான ஒரு பசைத் தொழிற்கூடமும் செயல் பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாளுக்குச் சுந்தரராசப் பெருமாள் என்று பெயர். ஆண்டாள், கருடன், தாயார், அனுமன், சரஸ்வதி சன்னதிகள் உண்டு. இங்கு நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பானது. சந்தான கிருஷ்ணருக்கும் இவ்வூரில் ஆலயம் உண்டு. எஸ்.பி. எல் சிவகாமி ஆச்சி அவர்களால் கீழப்பெருமாள் கோவிலின் எதிர்ப்புறத்தில் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோயில் ஏகாதசிமடமாகும். இக்கோயில் 2010 ஆம் ஆண்டில் சி. பழ. சுப. சி குடும்பத்தாரால் திருக்குடமுழுக்கு செய்யப் பெற்றது.    
    கிழக்கிலும் மேற்கிலும் பெருமாள்கள் இருக்கப் பச்சைப் பசேலென்ற காட்டில் சிவன் இருக்கிறார். இவ்வூரின் எல்லையில் விளங்கும் கைலாச நாதர் நித்யகல்யாணி கோவில் உள்ளது. இதனைக் காட்டுச் சிவன் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர். அடர்ந்த வனத்தில் பூத்த புதுமலராகச் சிவபிரான் இங்குக் காட்சி தருகிறார். இக்கோயிலின் அருகில் உள்ள வனமும், குளமும் சிவவளமையைக் காட்டுவன. கண்ணுக்குக் குளிர்ச்சியை நல்கி மூசு வண்டறைப் பொய்கைச் சூழலைத் தருகின்றன.
 இக்கோயில்கள் தவிர இரட்டைப் பிள்ளையார் கோயில், ஐயப்பன் கோவில், நடராசபுரம் ஊருணிப் பிள்ளையார் கோயில் போன்றனவும் பெயர் சொல்லும் அளவில் விளங்குகின்றன. நடராசபுரத்தில் உள்ள ஊருணி குடிநீர் ஊருணியாக இன்னமும் பாதுகாக்கப்பெற்று வருகிறது.
    புதுவயல் சார்ந்த வீரப்ப சுவாமிகள் கோவிலூர் வேதாந்த மடத்தில் பயின்று அங்கேயே துறவு பூண்டு கோவிலூர் ஆதீன மடாதிபதியாகவும் விளங்கினார். இவர் 1848 ஆம் ஆண்டு பிறந்தார். 1883 ஆம் ஆண்டில் மடாதிபதியாகி 28 ஆண்டுகள் அருளாட்சி நடத்தினார். இவரின் அருளாட்சிக் காலத்தில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றன. இவர் உடன் கோபப்படும் தன்மை வாய்ந்தவர். இவரின் கோபத்தன்மை மாற திருக்களர் என்ற ஆலயத்திற்குச் செல்ல வழிகாட்டப்பெற்றது. இவரும் அக்கோயிலுக்குச் சென்றார். இவரின் கோபம் தீர்ந்தது. திருக்களரில் துர்வாச முனிவருக்குக் கோபம் வராமல் சிவபெருமான் கருணைபுரிந்தான் என்பதால் இவருக்கும் அந்நிலை கிடைத்தது. இவர் திருக்களரில் ஓடாமல் நின்றிருந்த தேரைத் தன் உயிர் தந்து ஓடவைத்தார். புதிதாகச் செய்யப்பெற்ற தேர் முதன் முதலாக நகர்த்தப்படும்போது, உயிர்ப்பலி தரவேண்டும் என்று தேர் செய்பவர்கள் சொல்ல ;வீரப்ப சுவாமிகள் உயிர்ப்பலி கூடாது என்று அதனைத் தவிர்த்தார். உயிர்ப்பலி தராமல் ஓடிய தேர் ஓரிடத்தில் நின்றுவிட்டது. இதனை அறிந்த வீரப்ப சுவாமிகள் தன் உயிரை எடுத்துக்கொண்டுத் தேரை நகர்த்த இறைவனை இறைஞ்சினார். தேர் நகர்ந்தது. ஆனால் வீரப்ப சுவாமிகளின் உயிர் பிரிந்தது. அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது திருக்களரில் அவரின் அருட்சாமாதி இன்னமும்; அன்பர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் அரும்பாடு பட்டுச் செப்பனிட்ட கோவிலூர் திருநெல்லை அம்மன் கலைக்கோயில் இன்னமும் கலைவண்ணம் மாறாமல் அவரின் புகழ் பாடுகிறது. புதுவயலில் பிறந்த வீரப்ப சுவாமிகளால்  கோவிலூர் ஆதீனம் பெருமை பெற்றது. இன்னமும் அதன் வழி நடக்கிறது.
    தெய்வப் பாமாலைகள் பாடிப் பணிந்தேத்தும் பணியிலும் புதுவயல் நகரத்தார்கள் புகழ் பெற்று விளங்கினர். சண்முகச் செட்டியார் என்பவர் அளகை எனப்படும் சாக்கோட்டையை முன்வைத்து எட்டுப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். அளகைக் கலிவெண்பா, அளகை வெண்பாமாலை, அளகைச் சிலேடை வெண்பா, அளகை வெண்பா அந்தாதி, அளகைப் பதிற்றுப் பத்துப் பதிகம், அளகை அலங்காரம், அளகை உமை அந்தாதி, அளகை உமையம்மை பிள்ளைத் தமிழ் ஆகியன எட்டு நூல்கள் ஆகும். இவை தவிர சித்தி விநாயகர் மாலை, கைலாச விநாயகர் அந்தாதி, பழனியாண்டவர் மாலை, கம்பை நான்மணி மாலை, கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய செய்யுள்களையும் இவர் இயற்றியுள்ளார்.
    ஆண்டுதோறும் இராமாயணம் படித்தல், கந்தர் சஷ்டி விழா, ஐயப்பன் கோவில் முடிகட்டுதல் நிகழ்ச்சி ஆகியவற்றில் பக்தி இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நவராத்திரி சமயத்தில் நடைபெறும் அம்பு போடும் நிகழ்ச்சி நடராச ஊரணிக்கரையில் மிகச் சிறப்புடன் நடந்து வருகின்றது. பேட்டையார் மண்டகப்படியின்போதும் இலக்கிய நாடக நிகழ்ச்சிகள் வைக்கப்பெறுகின்றன.
    இவைதவிர படைப்பு வீடுகள் பலவும் இவ்வூரில் உள்ளன. இளையாற்றங்குடி பெருமருதூருடையார், வைரவன் கோயில் பெரிய வகுப்பு, வயிரவன் கோயில் தெய்யனார் வகுப்பு, சூரக்குடி பங்காளிகள் ஆகியோர் படைப்புகள் படைத்துவருகின்றனர். நல்லிப் பாட்டி-கருப்பையா படைப்பு வீடு ஒன்றும் உள்ளது.
தமிழ்ச் சிறப்பு
    இவ்வூரில் சரசுவதி சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவப்பெற்றுள்ளது. 1922 ஆம் ஆண்டு துவங்கப்பெற்ற இச்சங்கம் அவ்வாண்டு முதல் இன்றுவரை தமிழறிஞர்கள் பலரை அழைத்துத் தமிழ்மணம் பரப்பி வருகிறது. இதன் துணை அமைப்பாக ஸ்ரீ சரசுவதி வித்யாசாலை என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பெற்றது. இக்கல்வி நிறுவனத்தின் வாயிலாக துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியன செயல்பட்டு வருகின்றன. துவக்கப்பள்ளியில் இருபாலரும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பெண்களும் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டுவிழா சிறப்பிற்குரியது. இவ்வாண்டுவிழாக்களில் மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பெற்றுள்ளன. மேலும் இச்சங்கத்திற்கு வ.உ.சிதம்பரனார், ரா.பி சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், டி.கே.சி,  திருவி.க, ஐயன் பெருமாள் கோனார், சீனுவாச ராகவன், முத்துசிவன், வ.சுப.மா., கம்பனடிப்பொடி சா. கணேசனார் போன்ற பல அறிஞர்கள் வந்து உரையாற்றியுள்ளனர். இந்நிறுவனத்தின் சார்பில் சரசுவதி பூசை அன்று சரசுவதி தேவி தேரில் பவனி வருவாள்;.
கல்விச் சிறப்பு
    ஆண்கள் படிக்கும் பள்ளியாக இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி விளங்கிவருகின்றது. இக்கல்வி நிறுவனத்தின் சார்பில் துவக்கப்பள்ளியும் நடைபெற்றுவருகிறது. இப்பள்ளி தவிர  ஜி.டி நாயுடு பெயரில் ஒரு துவக்கப்பள்ளியும் n;தாழிற்பயிற்சிப் பள்ளியும் சாக்கோட்டையில் நடைபெற்றுவருகிறது. இலவசமாகத் தையல் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முதலியனவற்றை இங்குக் கற்கலாம். தற்போது கலைவாணிப் பள்ளி, வள்ளியம்மை ஆச்சி மாண்டிச்சேரிப் பள்ளி, அல்மீன் பள்ளி, வித்யாகிரிப் பள்ளி ஆகியனவும், வித்யாகிரி கலைக் கல்லூரியும் புதுவயல் சார்ந்து அமைந்துள்ளன.
வணிகச் சிறப்பு
     இவ்வூரில் நடைபெறும் புதன் கிழமைச் சந்தை குறிப்பிடத்தகுந்தது. மேலும் தற்போது அரிசி உருவாக்கும் தொழிற்சாலைகளால் இவ்வூர் வணிகச் சிறப்பினை ;அ;திகம் பெற்றுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பாண்டியன் கிராம வங்கி, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவுர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் தானியங்கிப் பணச் சேவை மையத்துடன் இயங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு வங்கியும் உள்ளது. இங்கு வணிகத்திற்கு வரும் பெரியகோட்டை மல்லி சிறப்புடையது.
நிர்வாகம்
    புதுவயல் பேரூராட்சி நிர்வாக அமைப்புடையது. இப்பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கட்டடத்தை யெ. மு. விஸ்வநாதன் அவர்கள் கட்டித் தந்துள்ளார்கள். இவர் புதுவயல் பேரூராட்சி த்லைவராகவும் இருந்தவர். இதன் காரணமாக இப்பேரூராட்சி நிலையத்திற்கு விசுவநாதன் நிலையம் என்று பெயர் வைக்கப்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரில் மருத்துவமனை அமைய யெ.மு. குடும்பத்தார் நிலம் அளித்து உதவி செய்துள்ளனர். முத்தப்பா பூங்கா என்றொரு பூங்காவும் சிறப்புடன் நிர்வகிக்கப்பெற்று வரப்பெறுகிறது. இவர்களின் மூத்தோர் யெ. முத்தப்பன் அவர்கள் ராவ் சாகிபு பட்டம் பெற்றவர். நகரத்தார்கள் தங்கள் விழாக்களை நடத்திக் கொள்ள ஒரு திருமண மண்டபம் அ;மைக்கப்பெற்றுள்ளது. அதில் பாதுகாப்புப் பெட்டக வசதியும் வைக்கப்பெற்றுள்ளது. இதனுடன் யெ. மு. சொ அரங்கம் என்ற அரங்கம் மாப்பிள்ளை அழைப்பு போன்ற விசேடங்களுக்குப் பயன்படுத்தப்பெற்று வருகிறது. இவ்வூர் நகரத்தார் ஒன்றிணைந்து அவ்வப்போது முகவரிப் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
இலக்கியவாதிகள்
    இவ்வூர் இலக்கியவாதிகள் பலரின் உறைவிடமாக விளங்கி வருகிறது. இவ்வூர் சார்ந்த வாழும் இலக்கியவாதிகளாக திருமதி உமையாள் முத்து, முனைவர் பழ. முத்தப்பன், கவிஞர் செல்லப்பன் ஆகியோர் விளங்குகின்றனர். கவிஞர் பெரி சிவனடியான், ஆசிரியர் செல்லப்பன் போன்றோர் வாழ்ந்த படைப்பாளர்களாக விளங்குகின்றனர்.

Sunday, April 03, 2016

அந்தமான் கம்பராமாயணக் கருத்தரங்கு அழைப்பிதழ்

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்
பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ
உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட
கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின்
அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.
கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம்
நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை
இதனுடன் இணைத்துள்ளோம்.

இவ்வழைப்பினை ஏற்றுத்  தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும்
இவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.

--



Tuesday, March 15, 2016

தினமணி நாளிதழில் கம்பன் திருவிழா பற்றிய அறிவிப்பு வெளிவந்தள்ளது.

காரைக்குடியில் மார்ச் 21 இல் கம்பன் திருவிழா தொடக்கம்

First Published : 16 March 2016 05:31 AM IST
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், இந்தாண்டுக்கான கம்பன் திருவிழா கல்லுக்கட்டிப் பகுதியில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மார்ச் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும்,  மார்ச் 24ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலிலும் நடைபெற உள்ளதாக, காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் தெரிவித்துள்ளார். 
  இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணியளவில், கம்பன் திருவிழா தொடங்குகிறது.
  விழாவில், தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம் தலைமை வகிக்கிறார்.
  கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றுப் பேசுகிறார்.
   பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் தொடக்க உரையாற்றுகிறார். இசைத் தமிழறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் எழுதிய கம்பனில் இசைத் தமிழ் என்ற நூலை, மதுரை தியாகராஜர் கல்லூரிச் செயலர் ஹரி தியாகராஜன் வெளியிடுகிறார்.
  பொன் விழா கொண்டாடிய புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் வி.பி. சிவக்கொழுந்துவுக்கு கம்ப வள்ளல் விருதை, மதுரை கம்பன் கழகத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன் வழங்கிப் பேசுகிறார். கோவை கம்பன் கழகத் துணைச் செயலர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் என்ற நூலையும், பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய காரைக்குடியில் ஜீவா என்ற நூலையும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் த. ராமலிங்கம் வெளியிடுகிறார்.
  கம்பன் கழகம் சார்பில், அந்தமான் தீவில் வரும் ஏப்ரல் மாதம் கூட்டப்படவுள்ள மூன்றாம் உலகத் தமிழ் கருத்தரங்கத்துக்கான செய்தி விழா மடலை, செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநரும், நமது செட்டிநாடு இதழ் புரவலருமான ராஜாமணி முத்துக்கணேசன் வெளியிடுகிறார்.
  கோவிலூர் ஆதீனகர்த்தர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகளுக்கு அவரது கல்விப் பணிகளைப் பாராட்டி, கம்பன் அடிப்பொடி விருதை மனிதத் தேனீ  இரா. சொக்கலிங்கம் வழங்கிப் பேசுகிறார்.
  இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கவிஞர் வள்ளி முத்தையா பரிசு வழங்குகிறார்.
  இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், எம். கவிதா தமிழிசை வழங்குகிறார்.
  தொடர்ந்து, பேராசிரியர் த. ராமலிங்கம் கம்பனில் மறக்க முடியாதது என்ற தலைப்பிலும், கம்பனில் மறக்கக் கூடாதது என்ற தலைப்பில் பழ. கருப்பையாவும் பேசுகின்றனர்.
  தமிழ் வெள்ளம் என்ற பொருளில் நடைபெறும் கவியரங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்துப் பேசுகிறார். இதில், சொற்கடல்
என்ற தலைப்பில் கவிதாயினி ருக்மணி பன்னீர்செல்வமும், சுவை ஊற்று என்ற தலைப்பில் கவிதாயினி சல்மாவும் கவிதை வழங்குகின்றனர்.
  மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு வெளிப்படுகின்றார் என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதற்கு, நடுவராக நெல்லைக் கண்ணன் செயல்படுகிறார்.
  நாட்டரசன்கோட்டையில் கம்பன் அருட்கோயிலில் நடைபெறும் நான்காம் நாள் நிகழ்ச்சியில், லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் பாடுகின்றனர், டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமை வகித்துப் பேசுகிறார்.
  திருச்சி கலைக் காவரிக் குழுவினர் கம்பன் அருட்கவி ஐந்து வழங்குகின்றனர்.
   விழாவில், கண. சுந்தர் வரவேற்றுப் பேசுகிறார். கம்பன் கலை நகைச்சுவை என்ற தலைப்பில் முனைவர் இளசை சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
 முடிவில், பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார் என்றார்

Friday, March 11, 2016

கம்பன் திருவிழா 2016 வல்லமை இதழில் வெளிவந்த பகுதி

காரைக்குடி – 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்
வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது.
24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது.
அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)
____________________________________
21.3.2016 
திங்கட்கிழமை மாலை 5.00 மணி திருவிழா மங்கலம்
____________________________________
தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்
இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
மலர் வணக்கம் – திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
கல்லூரி மாணவ மாணவியர்
வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்
இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு
மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்
பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்ப வள்ளல் விருது வழங்கிப் பாராட்டு
மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன்
கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் நூல் வெளியீடு
பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில் ஜீவா என்ற நூல் வெளியீடு
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்
அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு – செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர் திரு இராஜாமணி முத்துக்கணேசன்
கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு – மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம்
மாணாக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள்
____________________________________
22.3.2016 
செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணி பூர நாள் நிகழ்ச்சி
____________________________________
தமிழமுதம் – செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )
கருத்துப்பொழிவு
கம்பனில் மறக்க முடியாதது – திரு. த. இராமலிங்கம்
கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா
கவிப்பொழிவு
பொருள் – தமிழ் வெள்ளம்
தொடக்கப்பொழிவு – நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு கனிமொழி
சொற்கடல் – கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
சுவை ஊற்று – கவிதாயினி திருமதி சல்மா
____________________________________
23.3.2016 
புதன் கிழமை மாலை 5.00 மணி உத்தரநாள்
____________________________________
தமிழமுதம்- செல்வி எம். கவிதா
பட்டிமண்டபம்
நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்.
தலைப்பு – எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
வெளிப்படுகின்றார்?
இராமன் -கைகேயி- திரு. வே. சங்கர நாராயணன்
திருமதி பாரதி பாபு
திரு பாகை கண்ணதாசன்
இராமன் – இராவணன் திரு இரா. மாது
திரு. சுமதிஸ்ரீ
திரு. மெ. ஜெயம்கொண்டான்
இராமன்- சிறைமீண்ட சீதை
திரு. பழ. முத்தப்பன்
திருமதி இரா. கீதா
திரு அப்பச்சி எஸ் சபாபதி
நோக்கர் பெருமகள் நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்
நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் – திரு. மா. சிதம்பரம்
நடுவர் தீர்ப்பு
____________________________________
24.3.2016 
வியாழக்கிழமை மாலை 5.00 மணி நாட்டரசன் கோட்டை
____________________________________
தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அருட்கவி ஐந்து – திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்
இறைவணக்கம் – செல்வி எம்.கவிதா
வரவேற்புரை – திரு. கண. சுந்தர் உரை
கம்பன் கலை நகைச்சுவை – முனைவர் இளசை சுந்தரம்
நன்றியுரை – முனைவர் மு.பழனியப்பன்
வாழிய செந்தமிழ்
அனைவரும் வருக. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக.
____________________________________
இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி
____________________________________
நமது செட்டிநாடு – இதழ்
கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
சிங்கப்பூர் தமிழ் அன்பர்
காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
ஸ்ரீ விசாலம் சிட் பண்டு
மாணாக்கர்களுக்கான பரிசு
பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வேங்கடாசலம் பரிசு
____________________________________
1
2
3
4
5
6
7
8
____________________________________

Wednesday, January 27, 2016

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. திருமிகு அரிமழம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ் என்ற பொருளில் இசை உரை ஆற்ற உள்ளார்கள் . இசையோடு இயலும் நாடகமும் ஆக பொழியும் இப்பொழிவிற்கு அனைவரும் வருக.
நாள் - 6-2-16 சனிக்கிழமை
இடம்-கிருஷ்ணா திருமணமண்டபம் காரைக்குடி .
நேரம் சரியாக மாலை ஆறுமணி
வரவேற்புரை- திரு கம்பன்அடிசூடி, பழ.பழனியப்பன்
தொடக்கவுரை- தகைமிகு சி.நா.மீ உபயதுல்லா
இசைஉரை- கம்பனில் இசைத்தமிழ்
முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
நன்றி-சொ.சேதுபதி
இரவு சிற்றுண்டி
அனைவரும் வருக
கம்பன் புகழ்பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்
அழைப்பு இதனுடன் உள்ளது