
புதுவயல்அருமையான ஊர்.
சுற்றிலும் முந்திரிக் காடுகள்
அதில் துள்ளி ஓடும் மான்கள்
புழுதி பறக்கும் வீதிகள்
மழையில் மண்வாசனை மணக்கும்
நீண்டு உயரும் புகைபோக்கிகள்
நெல் அரவை மில்களின் அணிவகுப்பு
உழைப்பாளிகளின் தலைக்கவசம் சாக்கு
வாய்க்கவசம் மரியாதையான பேச்சு
இப்படிப்பட்ட ஊர் என் சொந்த ஊர்
செட்டிநாட்டு மரபும் பண்பாடும் சமையலும் மணக்கும்
இந்த ஊரில்
கைலாச விநாயகர் கோயில்
மேலப் பெருமாள் கோயில்
கீழப் பெருமாள் கோயில்
காட்டுச் சிவன் கோவில்
எனப் பல கோயில்கள் உண்டு
இராமநாதன் செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
சரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளிஎனப் பல பள்ளிகள் உண்டு
வீதிகளில் பேர் பெற்றது நடுவீதி
இதனுள் ஒரு வீதியில்என் வீடு
அதுவே நீங்கள் பார்ப்பது
6 comments:
நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அங்கு ஆலவயல் என்று ஒரு ஊர்இருக்கிறதோ நான் கேள்விப்பட்ட ஞாபகம்
எனக்கு புதுவயலின் அருகே பள்ளத்தூர்தான் சொந்த ஊர். நான் நீங்கள் கல்வி கற்றதாகக் கூறும் மேலைசிவபுரியில்தான் என் மனைவியைத் தேர்ந்தெடுத்தேன். என் மனைவி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தான் பி.லிட் மற்றும் எம். ஏ. மற்றும் எம்.பில் படித்தார்கள். உங்கள் ப்ளாக்கில் படங்கள் எனக்கு சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது. நன்றி
எனது ப்ளாக் : http://sarathecreator.blogspot.com
வணக்கம்,நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புள்ள முனைவர் பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம். புதுவயல் பெயர் பொருத்தம் அருமை.
உங்களது பதிவு மிகவும் நன்றாக அமைந்துள்ளது. உங்கள் கட்டுரைகள்,கவிதைகள் பவறைப் படித்துள்ளேன். நல்ல கருத்துக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
நல்ல பதிவு
மிகவும் அருமை
Post a Comment