நகரத்தார் ஊர்கள்



கோலமிகு கோட்டையூர்



ஞானக் கோலம்
            எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ மறையும் புதிர் மிக்க வாழ்க்கையாக அமைகிறது சாதாரண மனிதனின் வாழ்க்கை. மனிதப் புனிதர்களின் வாழ்க்கை இங்கே தொடங்கி, இங்கே வளர்ந்து இங்கே மறைவோம் இதற்காக வந்தோம் இதனை முடித்தோம் என்ற தீர்க்கதரிசன வாழ்க்கையாக அமைகிறது. வெறுமன உண்டு உறங்கிக் கழிகிறது சாதரண மனிதனின் வாழ்க்கை. வேறென விளங்கி நன்மைகளைச் செய்கிறது மனிதப்புனிதர்களின் வாழ்க்கை.
வைகாசி விசாகத்தன்று தான் முக்தி நிலை பெறுவேன் என்று சொல்லித் தன்னைக் கோட்டையூரில் ஜீவசமாதியாக வைக்கவேண்டும் என்று ஒரு ஞானி சொல்லித் தீர்க்க தரிசனமானர். அந்த ஞானி எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்.
            விராலிமலையின் இருண்ட குகைக்குள் வாழ்ந்தவர்க்குக் கோட்டையூர் ஜீவசமாதி தலமாகிவிட்டது. ஆறுமுகசுவாமிகளுக்கு எச்சில் பொறுக்கி என்ற பெயர் வந்தது விநோதம். அவர் தான் சாப்பிட்ட பிறகு சாப்பிட உதவிய எச்சில் இலையை வீசிவிடாமல் மடித்துத் தானே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வார். இலையைக் காப்பாற்றும் அவர் உணவுகளை மேலும் கீழும் வீசுவார். இப்படி விநோதமான நடவடிக்கைகள் அவரின் நடவடிக்கைகள். எதை ஒதுக்குகிறோம் அதை ஏற்பது ஞானிகளின் தனித்திறம்.
இவரைக் கண்டால் கண்டவரின் கர்ம வினைகள் அகன்றன. பிள்ளைப் பேறில்லாதவர்க்குப் பிள்ளைப் பேறு கிடைத்தது. இவரைக் கண்ட ஏழைகள் செல்வம் பெற்றனர்.  தனவந்தர்கள் இவர் தாள் பற்றி நின்றனர். இவரின் நிறைவுக் காலத்தில்  செட்டிநாட்டுக் கோட்டையூரில் தான் சமாதியாக வேண்டும் என்று உரைத்தார். அவ்வாறு அந்த மகான் ஜீவசமாதியில் உறையும் ஊர் கோட்டையூர். ஊருக்கு வெளியே உறவு கடந்து எல்லை கடந்து அருளால் அனைவரையும் அணைக்கக் காத்திருக்கிறார் அவர்.
                  
            சோலைகளின் நடுவில் இந்த ஞானக்கிழவரின் ஆலயம் இப்போது நிர்மானிக்கப்பெற்றுள்ளது. அழகான அமைதியான ஆலயம். பரதேசிகள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்  வரை பலர் வந்து வணங்கிச் செல்லும் நல்ல இடம் அந்த இடம். வியாழன் இரவு வந்துத் தங்கி வெள்ளியில் வழிபடும் நியதி கொண்ட தலம் அது. அங்கு பௌர்ணமி, அம்மாவாசை எல்லாம் புண்ணிய நாள்கள். வந்தோரின் எவ்வினையும் தீரும் அருள் பூமி அந்த பூமி.
            காரைக்குடியிலிருந்து புதுவயல் செல்லும் சாலையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் செழுமையைப் பேணிக்காத்து வருகிறார் பேராசிரியர் ஏ.எல். சிதம்பரம். இவர் ஆறுமுகசுவாமிகளின் சீடர். பேராசிரியர் சோம. இளவரசு அவர்கள் ஆறுமுக சுவாமிகள் மீது பாமாலைகள் பாடியுள்ளார். பேராசிரியர் ச. மெய்யப்பன் அதனைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இதனால்தான் ஆறுமுக சாமி பேராசிரியர்களுக்கும் ஞானியாக என்ற கருத்து உண்மையாகின்றது.  தியான மண்டபம், முன்மண்டபம்  கருவறை  இவற்றுடன் உள்ள இந்த ஞானியின் இருப்பிடத்திற்கு ஒருமுறை சென்றால் போதும் நன்மைகள் பல பெருகும்.
            கோட்டையூருக்கு மற்றுமொரு ஞானி வந்தார். அவரின் திருநாமம் குருநாதர் யோகாநந்த சுவாமிகள் என்பதாகும். அன்று கோட்டையூரில்ச சந்தைக்கிழமை. வந்தவருக்குக் கோட்டையூரும், அங்கிருந்த மக்களின் வாழ்க்கையும் , குளமும் மரங்களும் பிடித்துப்போய்விட்டன. வந்தவர் கோட்டையூரில் நான் ஜீவசமாதியாக விரும்புகிறேன்  என்றார். அவரின் விருப்பம் நிறைவேறியது. அவரின் கோயிலும் குருநாதன் கோயில் என்று இன்றும் குருவருள் தந்து வருகிறது. நகரத்தார்கள் அவருக்கு ஒரு கோயில் எழுப்பி அவரையும் கோட்டையூரில் நிறுத்தினர்.
            அவரின் கோயிலில் பலரும் தொண்டாற்றினர். ஒரு பெண்ணும் நிலைத்துத் தொண்டாற்றினார். பெயர் அறியா அப்பெண்ணின் உருவம் குருநாதர் கோயிலில் சான்றாய்ப் புகைப்படமாய் நிற்கிறது.
                                                

இவ்வாறு கோட்டையூர் அருள்தங்கும் ஜீவசமாதிகள் பெற்ற பெரும்பேறுடைய ஊராக விளங்கிநிற்கிறது. ஊருக்கு அழகு நடுவில் நீர்நிலை. ஊரின் ஞானத்திற்கு அழகு ஞானிகளின் ஜீவசமாதிகள்.
            இந்த ஜீவசமாதி அணிவகுப்புகளைத் தொடர்ந்து இன்னும் பல அற்புதங்கள் கோட்டையூரில்  இருக்கின்றன. சொல்லச் சொல்ல விரியும் அவை. சொல்லச் சொல்லச் சுவைகூட்டும் அவை.
இராமாயண நூற்கோலம்
            கோட்டையூரில் உள்ள  திரு  இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு  இராமாயண வீடு என்று அழைக்கப்படும் அளவிற்கு இராமாயணத்தை வாசித்துப் பெருமை பெற்றது. தொடர்ந்து எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இராமாயணத்தைப் புரட்டாசி மாதம் தோறும் 21 நாள்களாக அல்லது 27 நாட்களாக படித்துவரும் இறைத் தொண்டை இக்குடும்பத்தார் செய்துவருகின்றனர்.
            முதலில் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்த வீர. இராமசாமி செட்டியாருக்கு இறைவாக்காக இராமாயணம் படித்தால் நன்மை பெருகும் என்ற வாசகம் கிடைத்தது. அவரும் தன் மனைவி லட்சுமி ஆச்சியுடன் இராமேஸ்வரம் சென்று வந்து குலத்தெய்வக்கோயில்கள் தரிசனம் முடித்து இராமாயணம் படிக்க எண்ணினார். அவ்வாறே சென்று வந்தார்.
ஆனால் அவரிடம் இராமாயணம் படிக்கப் புத்தகம் எதுவும் இல்லை.  தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்  அவரின் வீட்டிற்கு எங்கிருந்தோ ஒருவர் வந்தார். அவர் ஓர் இராமாயணப் புத்தம், இராமர் படங்கள் ஆகியவற்றை இராமசாமி செட்டியாரிடம் தந்து மறைகிறார்.
 இதுவே இறைவன் பணிக்கு நல்ல தொடக்கம் என்று எண்ணிய இராமசாமி செட்டியார் புரட்டாசி மாதத்தில் ஒரு நல்லநாளில் தன் வீட்டுக் குபேர மூலையில் இராமாயணத்தை வாசிக்கத் தொடங்கினார். அன்றைய முதன் முதல் வாசிப்பில் ஓர் அதிசயம். அருளின் சக்தியாக விளங்கும் நல்லபாம்பு ஒன்று அவரின் இல்லம் நாடி வந்து படமெடுத்து ஆடி ஆசியளித்தது. அதுமுதல் இன்றுவரை நம்பிக்கை குறையாமல் இராமாயணம் வாசிக்கப்பெறுகிறது. அவர் வாசித்த இடத்தில் மிகு தூய்மை பேணப்பட்டு, மூங்கில் தட்டிகள் வைக்கப்பெற்று இல்லம் கோயிலானது. சத்தியம் தலை நின்றது.  அவரின் இராமாயண வாசிப்பால் அவருக்கு வீரப்பன் என்ற குழந்தை பிறந்தான். அவரும் இராமாயண வழியே வந்தவர். நடப்பவர்.
            இந்த இராமாயண வாசிப்பில் படங்கள் மட்டும் இல்லாமல் சில சிலைகளும் தெய்வக் கருவிகளும் வைத்து வணங்கப்படுகின்றன. பாலகாண்டத்திற்காக தொட்டில் கிலுகிலுப்பை போன்றன வைத்து வணங்கப்படுகின்றன. சீதா கல்யாணத்திற்காகத் தாலி வணங்கப்படுகிறது. இதுபோன்று ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏற்ற சிலைகள் வைத்து வணங்கப்பெறுகின்றன. சஞ்சீவி மலை தூக்கும் சிரஞ்சீவி ஆஞ்சநேயர்சிலைகளைக் காணக் கண்கோடி வேண்டும்.
 இவ்வரிசையில் பட்டாபிஷேகம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று முருகனுக்கான வேல் பூசை நடத்தப்பட்டு, அன்னதானம் செய்விக்கப்படுகிறது.
அடுத்த நாள் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, விடைகொடுக்கும் படலம் நடக்கிறது. இலக்கிய நிகழ்ச்சிகள் வைத்தும் இப்பட்டாபிஷேகத்தைச் சிறப்பி்த்து வருகிறது இராமசாமி செட்டியார் குடும்பம்.
இவ்வீடு போன்றே இன்னும் சில வீடுகளிலும் இராமயாணம் புரட்டாசி மாதத்தன்று வாசிக்கப்படுகிறது. அ.லெ. அண.லெ. அங்கப்ப செட்டியார் வீடு, மு.வெ. சா. இராம வீடு ஆகியவற்றிலும் இராமாயணம் படிக்கப்பெற்றுவருகிறது.
நவராத்திரி கலைக்கோலம்
கோட்டையூரின் கோலமிகு எழிலுக்கு மேலும் பெரும் சேர்ப்பது நவராத்திரி விழா. வள்ளல் அழகப்பரின் பாரம்பரியத்தில் வந்த வள்ளி ஆச்சி அவர்கள் கோட்டையூர் கே.வி.ஏஎல்.எம். பங்களா மெச்சி ஆச்சி கொலு  மண்டபத்தில் ஆண்டுதோறும் வைத்திடும் கொலு அலங்காரம் மிகச் சிறப்பானதாகும்.
பத்துநாளும் பத்துவகை அலங்காரங்களுடன் அருள்தரு கிருஷ்ணர் அலங்காரம் கொள்கிறார். அத்தோடு கொலு அரங்கில் ஒவ்வொரு நாள் அலங்காரத்திற்கு ஏற்றாற் போல காட்சிகள் இடம்பெறச் செய்யப்படும். கிருஷ்ண அலங்காரம் என்றால் கிருஷ்ணாவதாரக் காட்சிகள் காட்சிப்படுத்தப்படும்.
            இதற்காக வடநாடு, வெளிநாடு எல்லாம் சென்று பொம்மைகளைச் சேகரித்து இக்காட்சிகளை மிக நேர்த்தியாக பலர் உழைத்துச் செய்கின்றனர். கிருஷ்ணன் வெண்ணெய் திருடுவது, ராதாவுடன் விளையாடுவது, கோபியர் லீலை, பூதகி வதம், காளிங்க நர்த்தனம் என்று அன்று முழுவதம் கிருஷ்ண லீலையில் மனம் ஆழும்.
            இந்த கொலுவிற்காகத் தனி வீடு, கொலு பொம்மைகளைப் பாதுகாக்க தனித்தனி அலமாரிகள், வந்த குழந்தைகளுக்குப் பரிசுகள், விருந்து. கலைநிகழ்ச்சிகள் என்று ஊரே கொள்ளாமல் நவராத்திரிவிழாவினைச் சக்தியின் விழாவாக கவிஞர் வள்ளி முத்தையா அவர்கள் கொண்டாடிவருகிறார்கள். இக்கவிஞர் ரசிகமணியின் ரசிகப் பரம்பரையில் வந்தவர். பல கவிதை நூல்களின் ஆசிரியர்.
            வீ்ட்டில் நவராத்திரி. கோயில்களிலும் நவராத்திரி என்ற நிலையில் கோட்டையூர் கோயில்களிலும் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. நகரச் சிவன் கோயில், கோட்டை நாச்சியம்மன் கோயில், வேலங்குடி நகரச் சிவன் கோயில் ஆகியவற்றில் நடைபெறும் நவராத்திரி அலங்காரம் கண்களுக்கு இனிமை தருவனவாகும்.  பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரம் கோட்டையூர், வேலங்குடிக் கோயில்களில் இப்படித்தான் இருக்கும்.
      
            இவ்வாறு கலைகளால் கோலம் மிகுந்த கோட்டையூராக விளங்கும் இவ்வூர் தெய்வ மணம் பொங்கி வழியும் ஊராகவும் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள கோயில்கள் இருபதைத் தாண்டலாம். நோக்குமிடமெல்லாம் கைகூப்பியபடியே செல்லும் வண்ணமாக கோயில்கள் நிறைந்து காணப்படும் ஊராக இது விளங்குகிறது.
தெய்வக்கோலம்
            பிள்ளையார் கோயில்கள் பல இங்குள்ளன. சொற்கேட்ட விநாயகர் தான் மூத்த முக்கியமான விநாயகர். குருந்த மரத்தடியில் வீற்றிருக்கும் இவ்விநாயகர் கேட்டதையெல்லாம் தருவார். இப் பெருமானின் கோயில் கோட்டையூரின் வெளி ஓரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள முனீஸ்வரரின் சக்தியை அடக்கிச் சாந்தப்படுத்தும் அமைதியின் வடிவமாகச் சொற்கேட்ட விநாயகர் விளங்குகிறார்.
            கோயில் உருவாவதற்கு முன்பு இவ்விநாயகரை மாடு மேய்க்கும் சிறுவர்கள் பாடாய்ப் படுத்தியுள்ளனர். மாடு மேய்க்கும் சிறுவர்கள் தங்களுக்குப் பசி எடுக்கும்போது இவ்விநாயகரின் வயிற்றைத்தடவி உணவு வேண்டுவார்களாம். அவ்வாறு அவர்கள் வேண்டி முடிக்கும் முன்பே பக்தர்கள் யாராவது பொங்கல்,மோதகம், கொழுக்கட்டையோடு அங்கு வந்து விநாயகருக்குப் படைத்து அக்குழந்தைகளுக்கும் தருவார்களாம். மாடுமேய்த்த சிறுவர்கள் முதல் மாடிவீட்டுக் கோமான்கள் வரை யார் எதனைக் கேட்டாலும் கேட்டபடி தரும் பெருமான் சொற் கேட்ட விநாயகர் ஆவார்.
            இவர் வெயிலில் காய்வார். மழையில் நனைவார். பனியில் குளிர்வார். இவரின் கோயிலுக்கு மேல் விதானம் கிடையாது. பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு இவர் அருள்பாலித்து பழனிவரை பாதகம் இன்றிச் சென்றுவர பாதுகாப்பு நல்குவார்.  விரிந்த காதுகளுடன் நம் குறைகளை இவர் கேட்க சுற்றிலும் நாகர்கள் அடிபணிந்து நிற்க இவரின்  ஆட்சி அங்கு நடைபெற்றுவருகிறது. இவருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று முத்து அங்கி அலங்காரம் சார்த்தப்பெற்று விழா நடத்தப்படுகிறது.
இவரை வணங்கிக் கோட்டையூருக்குள் நுழைந்தால் இன்னும் பல விநாயகர்கள். மாத்தூர் மண்ணூர்ப்பிரிவைச் சார்ந்த மெ. க. குடும்பத்தார் ஒரு பிள்ளையார் கோயிலை நிறுவி வழிபாடு இயற்றி வருகின்றனர். இரணிக்கோவிலைச் சார்ந்த க.பெ. குடும்பத்தார் மரகத விநாயகர் கோயிலையும் ஊருணி ஒன்றையும் அமைத்துள்ளனர். நகரச் சிவன் கோயில் அருகில் ஜெயங்கொண்ட விநாயகர் கோயிலையும், ஊருணியையும் நேமங்கே்ாயில் நகரத்தார்கள் நிறுவினர். தற்போது அது நகரச் சிவன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பெற்றுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பர் உடற்பயிற்சி கல்லூரிக்கு அருகே சுந்தர விநாயகர் கோயில் ஒன்று நான்கு குடும்பத்தார்களுக்குச் சார்பில் அமைக்கப்பெற்றுள்ளது. இராம. பெ.இராம அழகப்பச் செட்டியார்,  உ.லெ. அண்ணாமலைச் செட்டியார், உ.லெ. உ.அழகப்பச் செட்டியார், உ.இராம. அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் இக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இவ்வாறு ஊரின் தொடக்கம், நடு, முடிவு என்ற எல்லா இடங்களிலும் பிள்ளையார் நிறைந்திருக்கிறார்.
            கோட்டையூரில் நகரச் சிவன் கோவில் ஒன்று நடுநாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள இறைவன் மீனாட்சி சுந்தரேசுவரர். இறைவி  மீனாட்சி அம்பிகை.  கோயிலின் ராஜகோபுரம் பார்க்க பார்க்க  மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகினது.
                     
மேலும் இக்கோயிலில் நடைபெறும் நடராசர் அபிடேகம் சிறப்பானது.
            இக்கோயில் 1940 ஆம் ஆண்டு நகரத்தார்களால் கட்டப்பெற்று திருக்குட முழுக்கு விழா நிகழ்த்தப்பெற்றது. மேலும் 1962, 1980, 1996 ஆகிய ஆண்டுகளில் இக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நிகழ்த்தப்பெற்றுள்ளது.
            கோட்டையூரின் தெய்வீகப் பெருமைக்கு மற்றொரு மாணிக்கமாகத் திகழ்வது வேலங்குடியில் உள்ள நகரக் கோயில் ஆகும். பாண்டிய மன்னனால் கி.பி. 718 ஆம் ஆண்டு நகரத்தார்க்கு இது தரப்பெற்றது. வேல மரங்கள் நிறைந்திருந்த பகுதியாதலால் இவ்வூருக்கு வேலங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு கண்டீஸ்வரர், இறைவி காமாட்சியம்மை ஆவர். இக்கோயிலுக்கு அருகில் அந்தணர் இருக்கைகள் உள்ளன.
இக்கோயிலின் தென்புறத்தில் ஊருணி ஒன்று அமைந்துள்ளது. இவ்வூருணிக்கரையில் அருள்மிகு தேசிக நாராயணப் பெருமாள் கோவிலும், அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோயிலும் அமைந்துள்ளன.
இவைதவிர கோட்டை நாச்சியம்மன் கோவில் ஒன்றும் நாட்டார்தம்  கோயிலாக இவ்வூரில் விளங்குகிறது. இக்கோயிலில் நவராத்திவிழா சிறப்பானது. மேலும் தற்போது புதிதாகத் தேர் செய்யப்பெற்று தேர்த்திருவிழாவும் கொண்டாடப் பெறுகின்றது.
   
            பக்தி மணக்கும் கோயில்கள்  நிறைந்த ஊர்  கோட்டையூர்  என்பதுபோல மடங்களும், படைப்பு வீடுகளும் இவ்வூரில் நிறைந்து காணப்படுகின்றன. மாத்தூர் மணலூர் பிரிவைச் சார்ந்த மெ.க குடும்பதார் ஒரு மடத்தையும் இரணிக்கோவிலைச் சார்ந்த க.பெ. குடும்பத்தார்  ஒரு மடத்தையும் நிறுவியுள்ளனர். இவைதவிர தற்போது மு.சி மடம் என்பதும் நிறுவப்பெற்றுள்ளது.



திருவண்ணாமலைத் திருப்பணிகள்
            திருவண்ணாமலையில் மெ. க. மடம் ஒன்று நிறுவப்பெற்றுள்ளது. அதன்வழி அன்னதானம் நடைபெறுகிறது. இம்மடம் 1872 முதல் நடைபெற்றுவருகிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு 1903, 1944 ஆகிய ஆண்டுகளில் இக்குடும்பத்தாரே குடமுழுக்கு செய்துள்ளனர்.
 அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணிகளுக்குக் கோட்டையூர் நகரத்தார்கள் பெரிதும் உதவியுள்ளனர். இதனைப் பின்வரும் குறிப்பு  வெளிப்படுத்தி நிற்கிறது. ‘‘கோட்டையூர் க.வீ.அழ குடும்பத்தாரால் ரூ 1,75,000 செலவில் சிவகங்கை தீர்த்தகுளமும் மற்றும் கோட்டையூர் அ.க.அ.மெ குடும்பத்தாரால் ரூபாய் 20,000 செலவில் பிராகார தலவரிசைகளும் ,கோட்டையூர் அ.க.அ.சித.வெ.நடேசன் செட்டியாரால் ரூ 5,௦௦௦ செலவில் தலவரிசைகளும் ,கோட்டையூர் ராம.பெ. நாராயணன் செட்டியாரால் ரூ 35,௦௦௦ செலவில் தாமிரத்தகடு வெய்த கலியாணக் கொட்டகையும் ( செட்டிநாட்டுப் பாணியில்)அமைக்கப்பெற்றன. நகரத்தார்கள் விசுவாச ஆண்டு வைகாசி 3 ஆம் நாள் (12/6/193)திருகுடமுழுகு சிறப்பாக நிகழ்த்தப்பட்டது .இத்தோடு மட்டும் நில்லாது கோட்டையூர் பெ.க.அ.சித.வீரப்பசெட்டியார், அவரின் சகோதரி வள்ளியம்மை ஆச்சி ,காரைக்குடி முத்து.அரு.,கோட்டையூர் அ.க.அ.மெ.வ.,ராமச்சந்திரபுரம் தீ.சொ.ராம.,தீ.நா.மு , தீஅ.சா., கானாடுகாத்தான் சா.ராம.மு.ராம , ராமசாமி செட்டியார் ,ராஜா ஸ்ர.அண்ணாமலை செட்டியார் ஆகியவர்களால் , வெள்ளி இந்திரவிமானங்கள் ,வெள்ளிக்காமதேனு வாகனம் ,வெள்ளி கற்பகவிருட்ச வாகனம் , வெள்ளிதேர்கள் , பெரிய ரிஷபவாகனங்கள் , பஞ்சமூர்த்தி வாகனங்கள் , செய்து கொடையாக தரப்பட்டன மரத்தேர்கள் பழுதுபார்த்தும் சில தேர்கள் புதுப்பிக்கவும் செய்தனர் .ரூபாய் 2,53,000 செலவில் கோட்டையூர் க.வீ அழ.குடும்பத்தார் , பெ.க.அ.சித.வீரப்ப செட்டியார் ,அ.க.அ.மெ.வெங்கடாசலம் செட்டியார் ,ராம.அழ.சிதம்பரம் செட்டியார் ,அ.கஅ.சிதம்பரம் செட்டியார் , அ.கஅ.சித.வெ.நடேசன் செட்டியார் கானாடுகாத்தான் வெ.சா.அண்ணாமலை செட்டியார் ,சா.அ.அண்ணாமலை செட்டியார் ,வெ.வீர.வெ.அரு.நாகாப்ப செட்டியார் .கொத்தமங்கலம் ராம.அரு.வெ.பெத்தாச்சி செட்டியார் ,சி.அசி.ராம.ராமன்செட்டியார் ,சி.அசி.அரு.வள்ளியம்மை ஆச்சி ,அரிமளம் செ.சித.முத்து செல்லப்ப செட்டியார் பள்ளத்தூர் ந.பெ.பெத்தப்பெருமாள் செட்டியார்,தேவகோட்டை எ.பெரி.கரு.சித.சிதம்பர செட்டியார் ,நா.க.அ.நா.பழனியப் செட்டியார், மகன் கண்ணப் செட்டியார் ,நா.க.அ.நா.பழ., ராமச்சந்திரபுரம் து.நா.முத்தையா செட்டியார் ,நற்சாந்துப்பட்டி வீ.மு. வீரப்பன் செட்டியார் ஆகியவர்களால் நவரத்தினங்கள் கொண்டு இழைக்கப்பட்ட திருவாபரணங்கள் , தங்க அங்கிகள் ,மணிமுடிகள் ,வெள்ளிக்கவசங்கள், வெள்ளிச் சாமான்கள் , வெள்ளிப் பூசைபொருட்கள் , இரத்தின மகுடங்கள் , வெள்ளியால் உபசார பொருட்கள் , வெண்கல அண்டாக்கள் , வெண்கல பொருட்கள் அமைக்கப் பெற்றன என்ற முகநூல் குறிப்பின்படி  அரிய பணிகள் பலவற்றைச் செய்வதில் கோட்டையூர் நகரத்தார்கள் முன்நிற்கின்றனர். (இப்பட்டியலில் இன்னும் பல நகரத்தார் செய்த பணிகள் சேர்க்கப்படவேண்டும்)
            இவ்வாறு கோட்டையூர் திருவண்ணாமலையை நினைக்க முத்தி என்ற நிலையில் கொண்டாடி வருகிறது. இவ்வரிசையில்  வேறு பல இடங்களில் உள்ள கோயில்களுக்கும் திருப்பணிகைளைக் கோட்டையூர் நகரத்தார்கள் செய்துள்ளனர். குட்டா என்னும் கர்நாடக மாநிலப் பகுதியில் விஜய கணபதி கோவிலைக் கட்டி நிர்வகித்து வருகின்றனர். களத்தூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு க.வீ. சொ. அழகப்பர் திருப்பணிகள் செய்துள்ளார். இவர் கல்லாலங்குடி, திருநெல்வாயில், திருநாரையூர், திருஅவனி வளநல்லூர்  ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். திருவெண்காட்டில் அண்ணாமலைச் செட்டியார் என்பவர் ஒரு பசுமடம் கட்டியுள்ளார்.
            சென்னையில் கட்டப்பெற்றுள்ள அறுபடைவீடு முருகன் கோயில்  கோட்டையூர்  சார்ந்த திருமதி அலமேலு அருணாசலம், திருமதி பார்வதி நாச்சியப்பன்  போன்றோர்  நிர்வாகத்தில் நடைபெற்றுவருகிறது. இக்கோயில் காஞ்சி மகாசுவாமிகளின் அருளாசிப்படி பெசண்ட நகரில்  கட்டப்பெற்றது. இங்கு வேல் கோயில், ஆறு படைவீடுகளுக்கு ஆறு கோயில்கள் ஆகியன  கட்டப்பெற்று இராச கோபுரமும் நிறைவு பெற்றுள்ளது. இராச கோபுரத்திற்கு  18.3.2016 அன்று கும்பாபிடேகம் செய்யப்பெற்றது. மருத்துவர் எஸ். சுந்தரம், சிவா, கிருஷ்ணா ஆகியோரும்  இக்கோயில் நிர்வாகத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
                  
படைப்புவீடுகள்
            பூமணப் பிச்சாத்தாள் படைப்பினை ஆண்டுதோறும் இளையாத்தங்குடி கழனிவாசல் பங்காளிகள் படைத்து வருகின்றனர். பள்ளத்தூர், ஆத்தங்குடி, கரைக்குடி, கோனாபட்டு, நேமத்தான்பட்டி ஆகிய ஊர்களைச் சார்ந்த பங்காளிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
            கோட்டையூர் நகரக்கோயிலின் மேல் புறத்தில் வயிரவர் படைப்பு வீடு அமைந்தள்ளது. இது நாட்டார் மற்றும் நகரத்தார்கள் பங்குபெறும் படைப்பு விழாவாக அமைந்துள்ளது.
           
            வயிரவர் படைப்புவீட்டில் உள்ள விளக்குகள், வேல் ஆகியன கொண்டு  உருவ அலங்காரம்செய்யப்படுகிறது. இது காண்பார் கண்களுக்கு அருள் மழையைத் தரும்
கல்விக் கோலம்
                கோட்டையூரில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பெற்றுள்ளன.   சனாதன தரும வித்தியாலயம் என்ற பெயரில் மாத்தூர் மண்ணூர்ப் பிரிவைச் சார்ந்த க.வீ.சொ. அழகப்பச் செட்டியார் ஒரு தொடக்கப் பள்ளியை 1940  ஆம் ஆண்டு நிறுவினார்.   இது அரசு உதவி பெறும் பள்ளியாகத் தற்போது நடைபெற்றுவருகிறது.
            தஞ்சாவூர் அருணாசலம்  அருணாசலம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. இதனை இளையாத்தங்குடி பெருமருதூர் பிரிவைச் சார்ந்த வெ.சி. அரு.அழ. அரு.அழ அருணாசலம் செட்டியார் தன் நன்கொடையால் உருவாக்கினார்.
            1965 ஆம் ஆண்டில் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அ.க.அ.சித. அழ. சிதம்பரம் செட்டியார் துவங்கினார். க.வீ. அழ.மு. அழ முத்தையா செட்டியார் 1974 ஆம் ஆண்டு முத்தையா அழகப்பா மெட்ரிக் பள்ளியைத் துவங்கினார். மேநாடு மெமோரியல் பள்ளி ஒன்றும் இங்கு இயங்கிவருகிறது.  இவைதவிர வள்ளல் அழகப்பர் துவங்கிய மகளிர் கல்லூரி இங்குதான் துவங்கப்பெற்றுப் பின்பு  காரைக்குடி சென்றது.

இவ்வாறு கல்வி வளர்ச்சியில் குறிக்கத்தக்க முன்னேற்றமடைந்து வரும் ஊராகக் கோட்டையூர் விளங்கிவருகிறது. தற்போது கல்வியியல் கல்லூரி ஒன்றும் இங்கும் இயங்கிவருகிறது. விசுவேசுவரா மருத்துவ மையமும் கல்வி நிறுவனமும் இங்கு உள்ளது.
பெருமக்களின் பெருமைக் கோலம்
            பல்துறை பெருமக்கள் பிறந்த ஊர் கோட்டையூர் ஆகும்.  , வள்ளல் அழகப்பர், ஏ.கே. செட்டியார், ரோஜா முத்தையா செட்டியார் போன்ற நகரத்தார் பெருமக்கள் பிறந்ததால் சிறந்த ஊராகக் கோட்டையூர் விளங்குகிறது.
வள்ளல் அழகப்பர்
            கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத் தெய்வம் என்று வ.சுப மாணிக்கனாரால் பாராட்டப்பெற்ற கொடைஞர் வள்ளல் அழகப்பர் ஆவார். இன்னமும் இவரின் புகழை இப்பாடலால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நினைவில் நிறுத்தி வருகிறது. பல்கலைக்கழகம் தொடங்கும் காலை வேளையில் இப்பாடலை ஒளிபரப்பச் செய்து, அனைவரும் எழுந்து நின்று இவ்வள்ளலுக்கு வணக்கம் செலுத்திவிட்டே பணிகளைத் தொடர்கின்றனர்.
            இந்த அளவிற்குக் கல்விக்குத் தொண்டாற்றியவர் வள்ளல் அழகப்பர். க.வீ. அழ இராமநாதன் செட்டியார் உமையாள் ஆச்சியின் இரண்டாவது மகனாக இவர் தோன்றினார். இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பினைப் படித்தார்.இவரே நகரத்தார் சமுதாயத்தில் முதலாவதாக முதுகலை முடித்தவராகக் கருதப்பெறுகிறார். இவரின் ஆசிரியர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் ஆவார். மேல் நாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுவந்தார்.அதுமட்டுமில்லாமல் விமானம் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.
            ஆலைகள், விமான நிறுவனம், உணவகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்றவற்றை இவர் தன் முயற்சியால் உருவாக்கினார்.  அவற்றில் இருந்து ஈட்டப்பட்ட செல்வத்தைப் பல அறப்பணிகளுக்குச் செலவிட்டார். தன் மகள் உமையாள் அவர்களின் திருமணத்தின்போது இவரின் அறப்பணி தொடக்கம்பெற்றது.
            திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவ இவர் கொடையளித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியைத் தொடங்க இவர் நிதியளித்தார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இவர் வழங்கிய நிதியால் கிண்டியில் பொறியியல் கல்வி தொடங்கப்பெற்றது.இதற்கு இவரின் பெயரே சூட்டப்பெற்றது. தக்கர் பாபா வித்யாலயத்தில் அழகப்பர் மண்டபம் கட்டக் கொடையளித்தார். 15.8.1947 அன்று அழகப்பர் கலைக் கல்லூரியை நிறுவ விதையிட்டார். காரைக்குடி காந்தி மாளிகையில் வாடகை இடம் பெற்று இது முதலில் தொடங்கப்பெற்றது. காரைக்குடியில் மைய மின்வேதியியல் கழகம் தொடங்கப்பட இவரே காரணம். இவரே கொடையாளர். அழகப்பர் கல்லூரியைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மாதிரி பள்ளி, பொறியியல் கல்லூரி, மகளிர் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என்று பல கல்வி நிறுவனங்களை இவர் தொடங்கினார். இவ்வாறு ஒரு பல்கலைக்கழக அளவில் பல கல்வியகங்கள் தொடங்கப்பெற்றன. அவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வீடுகள், மாணவர்க்கு விடுதிகள், விடுதியில் தரமிகு உணவு என்று இவரின் கொடை நீண்டது.
            இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியன வழங்கின. இவரைப் பண்டித நேரு அவர்கள் சமதர்ம முதலாளி எனப் புகழ்ந்தார். மகாத்மா காந்தியடிகள்  முன்மாதிரி தர்மகர்த்தா எனப் புகழ்ந்தார். இவருக்கு ஆங்கில அரசு சர் பட்டம் வழங்கியது. இந்திய அரசு பத்மபூசன் விருதளித்துச் சிறப்பித்தது. இவர் 5.4.1957 ஆம் நாளில் புகழுடம்பு எய்தினார். இவரின் நினைவினைப் போற்றிச் சிலைகளும், நினைவு இல்லங்களும் தற்போது காரைக்குடியில் அமைக்கப்பெற்றுள்ளன.

ஏ.கே. செட்டியார்
இவர் உலகம் சுற்றிய தமிழர். அ. கருப்பன் செட்டியார் என்ற இயற்பெயர் உடைய  ஏ.கே. செட்டியார் நூலசிரியராகவும், இதழாசிரியராகவும், சிறந்த புகைப்படக் கலைஞராகவும், ஆவணப்பட இயக்குநராகவும், பாரதி, காந்தி ஆகியோரின் வாழ்வியலைப் பதிவு செய்பவராகவும் விளங்கியவர். இவர் 3.11.1911 ஆம் ஆண்டு  பிறந்தார். கல்வி கற்று வளர்ந்த நிலையில் தனவணிகன் இதழின் நிருவாக ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இதனை ரெங்கூன் நகரில் இருந்து வெளியிட முடிவு செய்து பர்மாவிற்குச் சென்றார். சக்தி இதழில் இவர் பயணக்கட்டுரைகளை எழுதினார். குமரி மலர் என்ற இதழைத் தொடங்கி இவர் ஆசிரியராக இருந்து நடத்தினார். பல சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது.
‘உலகம் சுற்றும் தமிழன்’, ‘மலேசியா முதல் கனடா வரை’, ‘பிரயாண நினைவுகள்’, ‘கயானா முதல் காஸ்டியன் கடல்வரை’, ‘அமெரிக்கா நாட்டிலே’, ‘ஐரோப்பா வழியாக’, ‘குடகு” முதலியன இவர் படைத்த பதி்னோரு பயணநூல்களில் ஒருசிலவாகும். இவர் தொகுத்த நூல்கள் பலவாகும். புண்ணியவான் காந்தி, உணவு, பண்பு, கொய்த மலர்கள் போன்றன இவரால் தொகுக்கப்பெற்ற நூல்களாகும்.
மகாத்தமா காந்தியைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை  1940 ஆம் ஆண்டுவாக்கில் எடுத்தார். இதற்காகத் தான் படித்த புகைப்படக் கலைத்துறையைப் பயன்படுத்திக்கொணடார். இப்படத்தைத் தாயாரிப்பதற்காக பல நாடுகளுக்குச் சென்று காந்தி கலந்து கொண்ட நிகழ்வுகளைக் கொண்ட ஒளிப்படச் சுருள்களைத் தேடித் தொகுத்தார். இதற்கு  மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டின் அவதார புருஷர் என்று தலைப்பிட்டார்.தமிழில் தொகுப்புரை தந்து இதனை முதலில் வெளியிட்டார்.பின்பு தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் இது தொகுப்புரையுடன் வெளியிடப்பெற்றது. இப்படம் இந்திய நாட்டின் விடுதலையின்போது காந்தியடிகளின் பங்கினை வெளிப்படுத்தும் நோக்கில் திரையிடப்பெற்றது. அதன்பின்  பலநாடுகளில் இப்படம் திரையிடப்பெற்றது.

ரோஜா முத்தையா
            14.6.1926 ஆம் நாளில் பிறந்த முத்தையா சென்னையில் சிறந்த ஓவியராக விளங்கினார்.இவரின் ஓவிய நிலையத்திற்கு ரோஜா ஆர்ட்ஸ் என்று பெயர். இதன் காரணமாக ரோஜா முத்தையா என்ற அடைமொழியை இவர் பெற்றார். பொழுது போக்கிற்காக சென்னை மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் நூல்களை வாங்கிப் படிக்கவும் சேகரிக்கவும் தொடங்கினார். இதன் காரணமாக  அதிக அளவில் இவரிடம் ஆவணங்கள் சேர்ந்தன. இவற்றைப் பாதுகாப்பதன் பொருட்டுத் தன் சொந்த ஊரான கோட்டையூருக்கு வந்து வீடு ஒன்றைக் கட்டினார். அதுவே இவரின் ஆவணக் காப்பகமாக ஆகியது. 35000 நூல்கள், 60000 இதழ்கள் மற்றும் எண்ணிலடங்கா மரபுச் சின்னங்கள் இவரின் பாதுகாப்பில் இருந்தன. இவருக்கு அரசு ரெங்கநாதன் நினைவுப் பரிசளித்துச் சிறப்பித்தது. இவரின் ஆவணங்கள் இவருக்குப் பின் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நிலையில் சிகாகோ பல்கலைக்கழகம் இவற்றை வரிசைப்படுத்திச் சென்னை முகப்பேரில் ஆவணக் காப்பகமாக வைத்துப் பாதுகாத்தது. தற்போது இது தரமணிப் பகுதியில் இயங்கிவருகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் இது தற்போது இயங்கி வருகிறது. இதில் மூன்று லட்சம் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
            இவ்வாறு கோட்டையூரின் புகழை வெளி உலகிற்குக் காட்டிய மாணிக்கங்களாக இவர்கள் விளங்குகிறார்கள். இன்னும் பல கலைஞர்கள், அறிஞர்கள் இவ்வூரில்  வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர்.
டாக்டர் அழகு. அண்ணாமலை
            இவர் மாண்டிச்சேரி அம்மையாரிடம் பயிற்சி பெற்றவர். இவர் ஓமியோபதி மருத்துவம், கைரேகை சோதிடம், எண்கலை போன்ற பல துறைகளில் ஆளுமை பெற்றவர். சொ. முருகப்பா அவர்கள் நடத்திய கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
அழ. சிதம்பரம்
            இவர் இளநிலை நிலவியல் படிப்பினைக் காரைக்குடியிலும், முதுநிலை நிலவியல் படிப்பினை அண்ணாமலைப் பல்கலையிலும் கற்றார். பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரானார். அங்கு ஆசிரியர் சங்கத்தின் செயலராகப் பல்லாண்டு காலம் விளங்கினார். இவர் சிறந்த சொற்பொழிவாளரும் ஆவார்.
அ.க.அ.சித.அழ. சிதம்பரம்
            இவர் கோட்டையூருக்குப் பிள்ளை வந்தவர் ஆவார். இராசா சர் அண்ணாமலை செட்டியாரின் மகள் உண்ணாமலை ஆச்சி இவரின் துணைவியார் ஆவார். இவரே சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியைத் துவக்கியவர். இவர் மதுரை காமராசர் பல்கலையில் இராய.சொ நினைவு அறக்கட்டளையை உருவாக்கினார். விசுவேசுவரா மருத்துவக் கல்வி நிறுவனம் தொடங்க இவரே நிலக்கொடை அளித்தார்.
            முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு  புதுக்கோட்ட மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி  நிறுவனத்தில்  முதல்வராகப் பணிபுரிந்தவர். தற்போது வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் வழிகாட்டுநராக விளங்கிவருகிறார். இவர் கல்வியியல் சார்ந்த பல நூல்களையும், கம்பராமாயணம் சார்ந்த நூல்களையும் எழுதி வருகிறார்.சென்னை- கம்பன் கழகத்தில், காரைக்குடி கம்பன் கழகத்தில் இவரின் நூல்கள் பரிசுகள் பெற்றுள்ளன. இவர் நல்லாசிரியர் விருது பெற்றவர். கம்பராமாயணம் பகுப்பாய்வு, கம்பனும் உளவியலும், கம்பன் காட்டும் தலைமைப் பண்புகள், அகிம்சையும் அதன் தத்துவங்களும், கம்பனின் மனவளம், கம்பனின் கல்விச் சிறகுகள், கம்பனின் நாடக அரங்கு போன்றன இவரின் நூல்களாகும்.
            ஆர்.மீனாட்சி அவர்களும் தற்போது பல  எழுத்தாக்கங்களை எழுதி வருகிறார். நமது செட்டி நாடு இதழில் இவரின் எழுத்துகள் தனிச்சிறப்புடன் வெளிவருகின்றன.  இவ்வாறு பல்வேறு எழில் கோலங்களைக் கொண்டுக் கோட்டையூர் விளங்குவதால் இதனைக் கோலமிகு கோட்டையூர் என்றே அழைப்பது பொருந்தும்.
---------------------------------------------------------------------------------------------------------------------

குபேரன் நகர் அளகாபுரி 

          

நகரத்தார்களை தனவணிகர், தனவைசியர் என்று அழைப்பதும் உண்டு. தனம் என்றால் பொன் என்ற பொருள். தங்க வணிகம் செய்தவர்கள் நகரத்தார்கள். நகரத்தார்கள் செய்த பொன்வணிகத்திற்கு அதிபதி குபேரன் ஆவான். இவன் சிவபெருமானை வேண்டி இந்த உலகின் வடதிசையைக் காக்கும் பொறுப்பைப் பெற்றான். இலக்குமியிடம் இருந்து குபேரன் செல்வச் செழிப்பைப் பெற்று மற்றவர்க்கு அளித்துவருகிறான். இவனின் தலைநகர் அளகாபுரி என்றழைக்கப்பெறும் அளகை நகர் ஆகும். இவனின் பணியாளர்கள் சங்க நிதி, பதுமநிதி ஆகியோர் ஆவார்.
 கடல் வணிகம், தரை வணிகம் ஆகிய இருண்டிலும் சிறந்து விளங்கியவர்கள் நகரத்தார்கள் இவர்கள் குபேர நகரம் எனப்படும் அளகாபுரியில் இருந்து வந்தவர்கள் என்பது புராணக்கதை. குபேர நகர் வணிகர் என்று நகரத்தார்களை அழைக்கிறார் பாடுவார் முத்தப்பர். இதன் காரணமாக நகரத்தார்கள் தாம் வாழும் ஊர்கள் சிலவற்றிற்கு அளகாபுரி என்று பெயர் வைத்தனர். பதினாறூர் வட்டகையிலும், தெற்கு வட்டகையிலும், மேலப்பத்தூர வட்டகையிலும் அளகாபுரி என்ற பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன. நகரத்தார்கள் தனக்கும் குபேரனுக்கும் உள்ளத் தொடர்பினை இவ்வூர்களுக்குப் பெயர் வைத்ததன் மூலம் நன்றியுடன் நினைத்துப் பார்த்துக்கொண்டார்கள்.
கோட்டையூருக்கு அருகில் இருக்கும் கோ. அளகாபுரி (கண்டனூர் அளகாபுரி என்று அடையாளம் காட்டப்பட்டு கா. அளகாபுரி எனவும் இது அழைக்கப்பெறுகிறது), கொல்லங்குடிக்கு அருகில் உள்ள கொ. அளகாபுரி, கீழச்சீவல்பட்டிக்கு அருகில் உள்ள அளகாபுரி ஆகியன இவ்வகையில் குபேரனுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் அமைந்த நகரத்தார் ஊர்களாகும். இதற்குச் சான்றாக கீழச்சீவல்பட்டிக்கு அருகில் உள்ள இரணியூர் கோவிலில் குபேரன் சிலை கருங்கல்லில் வடிக்கப்பெற்று இப்போது சிறப்புடன் மாத விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இக்குபேரருக்கு உற்சவரும் உண்டு. பிள்ளையார்பட்டிக்கு அருகில் குபேரர் கோயில் என்ற ஒன்றும்  உள்ளது. இதனால் அளகாபுரிகளெல்லாம் குபேரபுரி அளவிற்குச் செழிப்பு பெறவேண்டுமு; என்ற நகரத்தாரின் நோக்கம் புரிகின்றது. அப்படியே இந்நகரில் இருந்தோர் பர்மாவில் பெருவியாபரம் செய்திருக்கின்றர். நல்லச் செல்வச் செழிப்புள்ள ஊராக பர்மா வியாபாரம் நடந்தவரை இந்த ஊர் அமைந்திருந்தது. அதன்பிறகும் ஏற்றத்துடன் இவ்வூர் விளங்கிவருகிறது. 
கோட்டையூர் அளகாபுரி அழகான சிறிய நகரத்தார் ஊர். நகரத்தார் வீடுகளுக்குள் புகுந்து செல்வதுபோல காரைக்குடி, அறந்தாங்கி சாலை அமைந்திருக்கிறது. நகரத்தார் வீடுகள் பெரிய மதில்களைக் கொண்டு விளங்கம். பெரிய இரு வீடுகளின் இரு மதில்களுக்கு இடையில் பேருந்துகளும் சிற்றுந்துகளும் நுழைந்துபோகும்போது நகரத்தார் வீடுகளுக்குள் போவது போன்ற பாவனையைத்தரும். 
கோ. அழகாபுரி என்ற இந்த ஊருக்கு ஓரமாய் நேர்வரிசையில் சீராய் அமைந்திருக்கும் அ;ரசமரங்களின் தோப்பு, அந்தத் தோப்பிற்குப் பக்கவாட்டில் குடிநீர் ஊருணி.




அதன் ஒரு கரையில்  அழகு விநாயகர் கோயில், அதன் இன்னொரு கரையில் அரிய நாச்சியம்மன் கோவில் என்று ஊரின் ஓரமே அழகாய் இருக்கிறது. தோப்பும், ஊரணியும், அழக விநாயகரும் இளையாத்தங்குடி பட்டினசாமிப் பங்காளிகளின் பூர்வீகச் சொத்தாகும். ~~பிள்iளாயர் கோவில் இல்லாத நகரத்தார் ஊரில்லை|| என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஊரில் நகரத்தார் பொது பிள்ளையார் கோவில் வேண்டும் என்ற நிலையில் அழகுவிநாயகர் அனைவருக்கும் பொதுவான விநாயகராக அமைந்தார். இவ்வூரில் உள்ள இளையாத்தங்குடி, மாத்தூர்,வைரவன்பட்டி, இரணியூர், பிள்iளாயார்பட்டி ஆகிய ஊர் நகரத்தார்கள் அவைருக்கும் பொதுவாக அழகு விநாயகர்கோயில் விளங்கும் சிறப்பு இதுவேயாகும். தற்போது இக்கோயிலை ஆர்.எம் அருணாசலம் அவர்கள் உள்ளிட்ட குழு நிர்வகித்து வருகிறது.
இப்பிள்ளையார் கோவில் தவிர மேலவிநாயகர் கோவில் என்ற ஒரு கோயிலும் இவ்வூரில் உள்ளது. இரணிக்கோயில் நகரத்தார்களால் உருவானது. தற்போது நகரத்தார்ப் பொதுவில் உள்ளது. இதனை எஸ்.பி. ராக்கப்பன் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நிர்வகித்துவருகின்றனர். அழ.அரு. அழகப்பச்  செட்டியார்  என்பவர் தனது செலவில் 1954 ஆம் ஆண்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைக் கட்டியுள்ளார். 

தற்போது இவர்தம் பரம்பரையினர் இக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இதனருகில் வெற்றி விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது.

இதன் அருகில் அமைந்துள்ள குளம் இயற்கை அழகு வாய்ந்தது. இதுவும் அழ. அரு அழகப்பச் செட்டியார் குடும்பத்தாரால் நிர்வகித்து வரப்பெறுகிறது. 

சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட் அரிய நாச்சிஅம்மன் கோவில் என்ற கோவில் ஒன்றும் இவ்வூரில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பத்துநாள்கள் திருவிழாக்கள் நடத்தப்பெறுகிறது

 இவ்விழாக்களை நகரத்தார்களே முன்நின்று நடத்துகின்றனர். இவ்விழாக்களில் அம்மன் ஏறிவரும் வெள்ளி வாகனங்களும் நகரத்தார்களால் செய்தளிக்கப்பெற்றுள்ளன. இக்கோவிலில் நவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆகாசத்தை அடக்கிக் காட்டும் நடராசர் மடம்

இவ்வூரில் நடராசர் மடத்துத் தெரு என்ற தெரு ஒன்று உண்டு. அதில் சென்றால் நடராசர் மடத்திற்குச் சென்று சேரலாம். சித.அ.சித. நாச்சியப்ப செட்டியார் அவர்களும் இன்னும் சில நகரத்தார்களும் இணைந்து இந்த மடத்தைக் கட்டியுள்ளனர். அழகான கலைவண்ணமிக்க பல கட்டுகள் கொண்ட மடம் இது. இதனுள் சென்றால் சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சென்ற அனுபவம் கி;ட்டும். சிதம்பர நடராசர் கோவிலில் உள்ள முக்கியமான அனைத்தும் கொண்ட ஒரு பூசை அறையை நடராச மடம் கொண்டுள்ளது. கொடிமரம், விமானம், நந்தி, நடராசர், சிவகாமி என்று சிதம்பரத்தின்  அனைத்து தெய்வங்களும் காட்சி தரும் அழகியமடம் இது. ஆகாய வடிவமாக சிதம்பரத்தில் நடராசர் காட்சி தருகிறார். அந்த ஆகாச ரூபத்தை அளகாபுரி நடராசமடம் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. கையெடுத்துக் கும்பிட்டால் சிதம்பர ரகசியம் தெரியும். 
மதிய உணவளித்து கல்வி புகட்டிய கல்விக் கூடம்
இந்திய விடுதலைக்குப் பின்னால் தமிழகத்தில் கர்மவீரர் காமராசர் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தினை ஏற்படுத்தி கல்விஅறிவினைப் பெருகச் செய்தார். ஆனால் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பேயே மதிய உணவுத் திட்டத்தைக் கல்விக் கூடத்தில் செயல்படுத்திய ஊர் கோ. அளகாபுரி. 1938 ஆம் ஆண்டில் ஸ்ரீஅழகிய தேவி வித்தியாசாலை என்ற ஆரம்பப் பாடசாலையை சித.அ.சித. நாச்சியப்ப செட்டியார் என்பர் தொடங்கினார். அக்காலம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கும் நன்முறையை இக்கல்விக் கூடம் பெற்றது. ஏறத்தாழ நாற்பது வருட காலம் இப்பணி தொடர்ந்தது. பின்பு அரசே ஏற்று மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் இன்னமும் அந்த அறம் தொடர்கிறது. உணவும் தந்து பல கல்வியும் தந்து அறம் வளர்த்த அருமைக்குரியவர்கள் நகரத்தார்கள். இப்பள்ளி தற்போதும் நன்முறையில் நடந்து வருகிறது.
முன்னோரை நினைவுகூரும் படைப்புகள்
இவ்வூரில் முன்னோரை நினைவுகூரும் வகையில் பல படைப்புகள் படைக்கப்பெற்று வருகின்றன. நாச்சாத்தாள் படைப்பு, கருப்பர் படைப்பு, அக்னி யாத்தாள் படைப்பு, ஆண்டாத்தாள் படைப்பு ஆகியன இப்படைப்புகளாகும்.
நாச்சாத்தாள் படைப்பு ஏழூர் படைப்பாகும். கோ.அளகாபுரி, அரிமழம், கானாடுகாத்தான், தேனிப்பட்டி, பலவான்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய ஏழு ஊர்களைச் சார்ந்த இளையாத்தங்குடி பட்டினசாமிப் பிரிவினைச் சார்ந்தவர்கள் இப்படைப்பினைச் செய்து வருகிறார்கள். இப்படைப்பில் கானாடு காத்தான் ராஜாவீடான, எம்.எ. எம்.ஆர் முத்தையா குடும்பத்தாரும் கலந்துகொள்வது வழக்கமாகும். இப்படைப்பின்போது ஆயிரக்கணக்கான நகரத்தார் பெருமக்கள் கூடுவர் என்பதால் அளகாபுரியில் உள்ள அனைத்து நகரத்தார்களும் தங்கள் இல்லங்களை நகரத்தார்கள் தங்கிக்கொள்ள அளிப்பது குறிக்கத்தக்க செய்தியாகும். 

காரைக்குடி, புதுவயல், கோ.அளகாபுரி ஆகிய மூன்று ஊர்களைச் சார்ந்த பட்டினசாமிப்பிரிவினர் கருப்பர் படைப்பு என்பதையும் படைத்து வருகின்றனர்.

அக்னியாத்தாள் படைப்பினை கோ. அளகாபுரி, அமராவதிப் புதூர் சார்ந்த பிள்ளையார்பட்டி நகரத்தார்கள் அக்கினியாத்தாள் படைப்பினைப் படைத்து வருகிறார்கள். கோ. அளகாபுரி புதுவயல் ஆகிய இரு ஊர்களைச் சார்ந்த வைரவன் கோயில் பெரியவகுப்பு நகரத்தார்கள் ஆண்டாத்தாள் படைப்பினை ஆண்டுதோறும் வைகாசி மாதப் படைப்பினைப் படைத்துவருகின்றனர். 
சென்ற இடமெல்லாம் அறங்கள்
கோ. அளகாபுரிக்கு அருகில் உள்ள ஊரான கல்லாலங்குடியில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகில் ஒரு பிள்ளையார் கோயில் கட்டப்பெற்றள்ளது. இதனைச் சித.அ.சித குடும்பத்தார் கட்டி நிர்வகித்துவருகின்றனர். இவ்வூர் சார்ந்த கா.இராம. ப. குடும்பத்தினர் சீர்காழியில் சம்பந்தர் மடம் ஒன்றை நிறுவி சம்பந்தர் குருபூiஐயை நடத்தி வருகின்றனர்.
இவ்வூரில் தற்போது 165 நகரத்தார் புள்ளிகள் உள்ளனர். இவ்வூர் கோட்டையூர் பேரூராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வூரின் தெருக்கள் நகரத்தார்களின் பெயர்களைக் கொண்டு அமைந்துள்ளன. சிதம்பரம் செட்டியார்தெரு, அழகப்ப செட்டியார் தெரு, காடப்பசெட்டியார் தெரு, உடையப்ப செட்டியார் தெரு போன்ற தெருப்பெயர்கள் இவற்றிற்குச் சான்றுகளாகும். இவ்வூரில் நான்கு குளங்கள் உள்ளன. 
குபேரனின் தலைநகரமான அளகாபுரி செட்டிநாட்டில் உண்மைபெற்று நிற்கிறது கோ. அளகாபுரி ஊராக. 
-------------------------------------------------------------------------------------------------------------------
சைவம் மணக்கும்  நேமத்தான்பட்டி


அப்பர் தெரு, சுந்தரர் தெ;ரு, மாணிக்கவாசகர் தெரு என்று  சைவ அடியார்களின் பெயர்களில் தெருக்கள். 
திருநாவுக்கரசு வித்தியாசாலை என்பதே பள்ளிக் கூடத்திற்கு வைக்கப்பெற்றிருக்கும் பெயர்..மெ..மு.பழ. பழனியப்பச் செட்டியார் என்பவர் உமாபதி சிவம் என்ற சைவ ஆசாரியர் பெயரில் வித்யாசாலை ஒன்றினை வைத்திருந்தார். அதன்மூலம் சில புத்தக வெளியீடுகள் செய்யப்பெற்றுள்ளன.
அறுபத்துமூவர் மடம்  என்பது அங்கிருக்கும் மடத்தின் பெயர். 
சி.கே. சுப்பிரமணிய முதலியாரால் பெரியபுராணக் காப்பியத்திற்கு உi;ர எழுதப்படுகிறது என்பது அறிந்து உடனடியாக அந்த ஊரில் உள்ள ஒருவர் அதை எழுதும் உரையாசிரியருக்கு காணிக்கையாக பணத்தை அ;னுப்பி வைக்கிறார். 
இப்படி சைவம் தழைக்கும் ஊராக விளங்குகிறது நேமத்தான் பட்டி. நேமம், நியமம் என்ற சொல் வணிகர்களின் குடியிருப்பு என்பதாக பொருள் கொள்ளப்படும். அவ்வகையில் வணிகர்களான நகரத்தார்கள் வந்து தங்கிய ஊர் நேமத்தான்பட்டி ஆகிவிட்டது. இதுவும் நகரத்தார் ஊர்களின் ஓர் எல்லைப்பகுதி. இதன் பிறகு புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் நகரத்தார் ஊர்கள் இல்லை. எனவே வணிகக்குடியான நகரத்தார்கள் தங்கிய ஓர் எல்லை சார்ந்த ஊருக்கு நேமத்தான் பட்டி என்று வைத்து அதன்பிறகு வணிகக்குடிகள் வாழும் ஊர்கள் ஒவ்வொன்றாக அமைக்கப்பெற்றுள்ளன.  

ஊரின் முன்னணியில் நிற்கிறது அறுபத்துமூவர் மடம். மு.பெ குடும்பத்தாரின் பராமரிப்பில் உள்ள இந்த மடத்தில் பழனியப்பன் ஐயா திருவுருவப்படம் வைக்கப்பெற்றுள்ளது. மேலும் பிள்ளையார்; நடராஜர், சிவ்காமி, மாணிக்கவாசகர் ஆகியோரின் சிலைகள் வைத்து வணங்கப்பெறுகின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்கள் உருவம் தஞ்சாவூர் ஓவியமாக வைத்து வணங்கப்பெறுகிறது. பூசை செய்ய பிள்ளைமார் குடும்பத்தார் உள்ளனர். தங்க அவர்களுக்கு தனி வீடு வசதி இருந்தது. அறுபத்துமூன்று நாயன்மார்களின் குருபூசையும் கொண்டாடப் பட்டு வந்திருக்கவேண்டும். தற்போத நால்வர் குருபூசை மடமாக விளங்குகிறது. முகப்பு, பந்திகட்டு, ஹால்வீடு என்று செட்டிநாட்டு அமைப்பில் அமைக்கப்பெற்று இந்த மடம் அனைவருக்கும் அன்னதானம் அளித்து வந்திருக்கிறது. இனியும் வளரும். இந்த மடத்தின் முகப்பில் ஆஞ்சநேயர் உருவத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு இப்போது தூப தீப அலங்காரம் நடைபெறுகிறது. சிவ சம்பந்தப்பட்ட இடத்தில் இராமபக்தன் தூணில் பிரசன்னமாகி இருக்கிறான். இது கல்தூண் செதுக்கிய சிற்பியின் கைவண்ணமா. அல்லது மடம் அமைத்த பெருந்தகையின் சர்வ சமய நோக்கமா. இவர்கள் ஆவுடையார் கோயிலில் மு.பெ.மடம் என்ற பெயரில் மடம் ஒன்றை நிறுவியுள்ளனர். அது தற்போது நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. அவனி வள நல்லூரிலும் இவர்களின் மடம் இருக்கிறது. 


ஆவுடையார் கோயிலில் உள்ள மடம்
இந்த மடத்தில் இருந்துத் தொடங்கி ஊரின் மையப்பகுதியில் வணங்கத்தக்கப் புனித இடங்கள் பல உ;ள்ளன. விழுதுகள் விடும் ஆலமரத்தடியில் கருப்பர் கோயில்.  அதனை அடுத்து பொன்னழகி தேவிக்குப் பத்துநாள் உற்சவம் நடக்கும் அலங்கார அரங்கம். சித்திரைமாதம் இரண்டாம் செவ்வாயன்று தொடங்கும் இவ்வம்மனின் திருவிழாவில் அம்மன் வாகனமேறி வனப்புடன் உலா வருவாள். நகரத்தார்களுக்கும் நாட்டார்களுக்கும் இந்தப் பத்துநாள் திருவிழா பெருந்திருவிழாவாகும். இதனைத்தொடர்ந்து அமைந்திருப்பது செல்வ சித்திவிநாயகர் கோயில் ஆகும். இதனைத் தொடர்ந்து நகரப்பொதுக்கோயிலாக ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. ஸ்ரீகற்பக விநாயகர், பாலதண்டாயுதபாணி கோயிலாக அது விளங்கி வருகிறது. தற்போது ஊரின் பொது நிகழ்வுகள் முடிவுகள் இங்கு வைத்து நகரத்தார்கள் பேசி முடித்துக்கொள்கிறார்கள். 
 
இவற்றைத் தொடர்ந்து உண்ணாமுலை ஆச்சி ஊர்ப்பொதுவாக அளித்த சங்கு நிற்கிற:து. இதுபோல குமமு. செ.மு. நல்லழகி அவர்கள் ஏற்படுத்திய இந்திய சுதந்திர விடுத்லையை நினைவுபடுத்தும் ஞாபகார்த்த விளக்குத் தூண் உள்ளது. இந்த விளக்கத் தூண் அர்ப்பணிக்கப்பட்ட நாள் 15.8.1947 என்றால் இந்த ஊரில் இருந்தவர்களின் விடுதலை உணர்வு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. 
இவ்வாறு ஊரின் மையம் பொது அமைப்புகளையும், தெய்வ சந்நிதானங்களையும் கொண்டுவிளங்குகிறது. இவ்வூரில் நாட்டாருக்குச் சொந்தமான சோலையாண்டவர் படைப்பு வீடும்; அமைந்திருக்கிறது.
இவைதவிர இவ்வூரில் ஒரு பெருமாள்கோயிலும், மெ.மு.பழ சத்திரமும், அதனோடு ஒரு முருகன் கோயிலும் உள்ளன. 
இவ்வூர் நகரத்தார்கள் கொ. இலட்சுமிபுரம் ஊரில் உள்ள சிவலோகநாதர் கோயிலையே வணங்கி வருகின்றனர். அக்கோயிலுக்கு 
நீர்வளம் பெருக்கும் குளங்கள்
ஊரின் ஓரத்தில் விசாலாட்சி ஊரணி அமைக்கப்பெற்றுள்ளது. அதனுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது. இதுதவிர புதுக்குளம்  அதனருகில் ஒரு பிள்ளையார்கோயிலும் உள்ளது. இவ்விரு குளங்களும் நல்லமுறையில் பராமரிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றன. மாணிக்கவாசகர் ஊருணியும் நீர்வளம் தருகிறது. 
பிள்ளையார் கோயில் ஊருணி

அப்பூதியடிகள் என்பவர் தன் வீடு,மக்கள், தர்மம் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அழைத்தார். அந்த அளவிற்கு நாவுக்கரசரின்மீது அவருக்கு ஈடுபாடு இருந்தது. அதே ஈடுபாடு உடைய ஒருவர் நேமத்தான்பட்டியில் வாழ்ந்தார். அவரின் பெயர் சி.வீ.நா. பழனியப்பச் செட்டியார். அவர் தன் இல்லத்திற்கும் அப்பர் பெயரை வைத்தார். தான் 1926 ஆம் ஆண்டு ஏற்படுத்திய கல்வி நிறுவனத்திற்கும் திருநாவுக்கரசர் நடுநிலைப்பள்ளி என்று பெயர் வைத்தார். இது தற்போது நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்ந்து;ளளது. மேலும் இப்பள்ளியின் அங்கமாக விளங்கிய நூலகத்திற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்தார். அங்குள்ள இசைக் கலை அரங்கிற்கு மருள்நீக்கியார் என்று அப்பரின் இயற்பெயரை வைத்தார். தமிழ்க்கடல் ராய.சொ அவர்களைக் n;காண்ட அப்பர் பாமாலை என்ற் நூலையும் வெளியிட வைத்தார். இப்பள்ளி தொடர்ந்து இவரின் குடும்பத்தாரால் நடைபெற்றுவருகிற:து. 
இப்பள்ளி தவிர ஈ.கா. சோ சோமசுந்தரம் செட்டியார் என்பவரால் 1934 ஆம் ஆண்டு சோமசுந்தர வித்தியாசாலை என்ற தொடக்கப்பள்ளியை ஏற்படுத்தியுள்ளார். 
புராண வாசிப்பு
இவ்வூரில்  உள்ள கருத்தான் செட்டியார் வீட்டில் ஆவணிமாதம் விநாயகர் புராணம், புரட்டாசி மாதத்தில் இராமாயணமும், ஐப்பசி மாதத்தில் கந்தபுராணமும் வாசிக்கப்பெறுகின்றன. இராமாயண வாசிப்பு எல்லா ஊர்களிலும் நடைபெறுவதுண்டு. ஆனால் இங்கு கந்தபுராணம், விநாயகபுராணமும் வாசிக்கப்பெறுவது என்பது இவ்வூரின் தெய்வத்தன்மையை மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது. 
படைப்பும் பாதுகாப்பும்
முன்னோர்களையும் முக்கிய தெய்வங்களையும் தாம் கூடும் இடத்தில் கொண்டுவந்து அவர்களை வணங்குவது என்பது நகரத்தார்களின் படைப்பு முறையாகும். இவ்வூரில் அடைக்காத்தாள் படைப்பு, பெரியசாமி படைப்பு, கிட்ட்hணிக் கருப்பர் படைப்பு ஆகிய படைப்புகள் படைக்கப்பெற்றுவருகின்றன.
அடைக்காத்தாள் படைப்புவீடு

இலக்கியம் மணக்கவைத்த இதழ்கள்
இவ்வூர் பல  இதழ்களை வெளியிட்ட ஊராகும். இவ்வூரில் இருந்து இராம பழனியப்பன் என்பவரால் இந்திரா என்ற இதழும், முத்துநாராயணனை ஆசிரியராகக் கொண்டு பாப்பாமலர் என்ற இதழும், பழ. பழனியப்பனை ஆசிரியராகக் கொண்டு முத்தம் என்னும் இதழும் வெளிவந்து இலக்கியம் மணம் பரப்பின. இந்திரா இதழ் செட்டிநாட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது. இது பல்சுவை இதழாகும். இவ்விதழின் ஆசிரியராக நீலகண்டன் என்பவர் இருந்தார். இவ்விதழ் நடத்திய சிறுகதைக் போட்டிகளில் வல்லிக்கண்ணன், அகிலன் போன்றோர் பரிசுகள் பெற்றுள்ளனர். 
நிகரற்ற ஒலிப்பதிவாளர்
எஸ்.பி . இராமநாதன் என்பவர் இவ்வூர் சார்ந்தவர். அவர் ஏ.வி.எம் நிறவனத்தில் ஒலிப்பதிவுத்துறையில் பணியாற்றினார். அதன் பிறகு கோல்டன் நிறுவனத்தின் தலைமை ஒலிப்பதிவாளராக ஆனார். இவர் பெங்களுருவில் சாமுண்டீஸ்வரா என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே (தமிழ்), பக்த கண்ணப்பா (தெலுங்கு), கோதுனி (இந்தி), ஆதிசங்கரர் (சமஸ்கிருதம்) ஆகிய படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றித் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மிகவும் பொறுமைசாலியாவர். இவரிடம் கோபத்தை வ்ரவழைக்கப் பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியே மிஞ்சியது என்பது திரைத்துறையினர் கண்ட உண்மை. 

நவீன வசதிகள் நோக்கி நகரும் நேமத்தான்பட்டி
நேமத்தான் பட்டியில் தற்போது நூலகம், மருத்துவமனை, முதியோர் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்பெற்று வருகிறது. மு.பெ. சித. கா. சொக்கலிங்கம் அவர்களின் நினைவாக அவரின் மகனார் காசி அவர்கள் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த நூலகத்தில் நாளேடுகள், வார ஏடுகள் ,மாத ஏடுகள் வரவழைக்கப்பெறுகின்றன. அவை மட்டும் இல்லாமல் ஆயிரம் புத்தகங்கள் பல்வேறு துறைசார்ந்த நிலையில் சேமித்து வைக்கப்பெற்றுள்ளது. அழகாக அடுக்கி, தலைப்பிடப்பட்டு, நவீன உட்காரும் படிக்கும் வசதிகளுடன் இந்நூலகம் அமைக்கப்பெற்றுள்ளது. நவீனமும் மரபும் இந்நூலகத்தில் காக்கப்பெற்றுவருகின்றன. ~~ இவ்வூரில் நகரத்தார் பெருமக்கள் தங்கிட நகரம் நோக்கிச் சென்றுவிடாமல் அன்றைய நகரங்களில் தங்கிடத் தற்போது பல வசதிகள் செய்யப்பெறுகின்றன. அவ்வரிசையில் ஒரு நூலகமும் ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன் காரணமாகத் தோன்றியதுதான் இந்த நூலகம்|| என்று தான் நூலகம் ஏற்படுத்தியதற்கான காரணத்தைச் சொல்கிறார் ;திரு. காசி. 

சென்னை வாழ் நேமத்தான்பட்டி நகரத்தார் சங்கம் சார்பில் நேமத்தான்பட்டியில் ஜீவன் அ;றக்கட்டளை ஆரம்பிக்கப்பெற்றுள்ளது. திருப்பதி செட்டியார், எஸ்.பழனியப்பன் ஆகியோர் சார்ந்த குழு இதற்கு முயற்சி எடுத்துள்ளது. நேத்தான்பட்டியில் உள்ள பெரியோர்களின் வாழ்வை எளிமையாக்க அவர்களுக்கு உணவு வழங்கும்  ஏற்பாட்டைச் செய்துவருகிறது இவ்வமைப்பு. குறைவான கட்டணத்தில் நிறைவான சத்தான உணவு என்ற அடிப்படையில் இயங்கி வரும் இவ்வமைப்பு வாழ்வினை எளிமையாக்கி வாழ வைக்கிறது. 
இவ்வூரில் வாழ்ந்த சடையப்பர் நினைவாக ~சானா|மருத்துவமனை ஒன்று துவங்கப்பெற்றுள்ளது. திரு. முத்துக்குமார் அவர்கள் துவங்கியுள்ள இம்முயற்சி நேமத்தான் பட்டி வாழ் மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளிக்கும். மருந்துகள், ஆலோசனை, மருத்துவரின் பார்வை போன்றவற்றிற்கு எதற்கும் பணம் செலுத்தத்தேவையில்லை என்ற நிலையில் இச்சேவை குறிக்கத்தக்கது. 

வள்ளுவர்; ~~அறவினை; செல்லும் வாயெல்லாம் செயல்|| என்று குறிப்பிடுவார். அதாவது அறத்தை எந்த எந்த வழிகளில் எல்லாமும் செய்யலாமோ அந்தஅந்த வழிகளில் எல்லாம் செய்யுங்கள் என்பது வள்ளுவர் வாக்கு.அதுபோல நவீன காலத்திற்கு ஏற்ப நல்ல பல வசதிகளை நேமத்தான்பட்டி நகரத்தார்கள் செய்து வருகிறார்கள்.  அடியார் மடமும், கல்விக் கூடமும் அந்தக் காலத்து அழியாத் தொண்டுகள் என்றால் நூலகமும், உணவுப் பராமரிப்பும், மருத்துவமும் இன்றைக்குத் தேவைப்படும் அறங்கள் ஆகும். இவ்வழியை மற்ற ஊர் நகரத்தார்களும் ஏற்றுச் செயல்படுத்தலாம். 
நேமத்தான்பட்டி பந்தய வண்டிகள் செய்யப்பெறும் ஊராக உள்ளது. குதிரை வண்டிப் பந்தயம், மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்குத் தேவையான வண்டிகள் இங்கு செய்யப்பெறுகின்றன. மரவேலை, கடைசல் வேலை தெரிந்த ஆசாரி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தத் தொழிலை இங்குச் செய்துவருகின்றனர். மாடு, குதிரை ஆகியவற்றின் அளவுகளுக்கு ஏற்பவே வண்டிகளைச் செய்ய இயலும். அதனால் ஒவ்வொரு வண்டியும் தனித்தன்மை வாய்ந்தாக வடிவமைக்கப்படுகிறது. 
இவ்வூரில் 367 நகரத்தார் புள்ளிகள் வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்து நிற்கும் கலை நயமிக்க வீடுகள், தெருவில் ஓரிருவர் செல்லும் மனித நடமாட்டம். புதிதாக யார் வந்தாலும் அறிந்து கொள்ளப்பட்டுவிடலாம் என்ற அளவிற்கு அகன்ற தெருக்கள் வாவென்று அழைக்கின்றன. வந்தோர் தங்க மடமுண்டு, படிக்க நூலகமுண்டு. உடல் நலம் பெற மருத்துவ வசதி உண்டு. உண்ண குறைந்த செலவில் உணவுண்டு வேறு என்ன வேண்டும் வாழ்க்கைக்கு!

---------------------------------------
பற்று அறுக்கும் ஊர் , பாவம் போக்கும் ஊர் - கண்டனூர்


பக்திப் பரவசம்
பற்று அறுத்தவர் பட்டினத்தார். பாவம் அறுப்பவர் பழனியாண்டவர். பற்று அறுத்தவரையும், பாவம் போக்குபவரையும் ஆண்டுதோறும் வணங்கும் ஊர் கண்டனூர். ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பட்டினத்தார் முக்தி பெற்றார். இதனை அடிப்படையாக வைத்து காவிரிப்பூம்பட்டினத்தில் பன்னிரண்டு நாட்கள் பட்டிணத்தார் திருவிழா நடத்தப்பெற்று வருகிறது. இதனைத் தொடங்கியவர் கண்டனூரைச் சார்ந்த மகாதேவ காசிச ;செட்டியார் ஆவார். இவர் சிவத்தொண்டுகள் பல புரிந்து வந்தவர். மகாதேவ என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் இவர் மகாதேவ காசிச்செட்டியார் என அழைக்கப்பெற்றார். இவர் ஒரு முறை காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சென்றபோது அங்கு சின்மயானந்த சுவாமிகள் பட்டினத்தார் இவ்வூரில்தான் வாழ்ந்தார். அவருக்கு விழா எடுக்கவேண்டும் என்ற தன் நெடுநாளைய ஆசையைத் தெரிவித்தார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மகாதேவ காசிச்செட்டியாருக்கு இவ்விழாவைத் தாம் எடுத்துநடத்தவேண்டும் என்று தோன்றியது. இவர் பட்டினத்தார் விழாவைச் சின்மயானந்த சுவாமிகளின் வழிகாட்டிலின்படி ஆரம்பித்தார். இவர் ஆரம்பிக்கும்போது விடுதி அங்குக் கட்டப்பெறவில்லை. கொட்டகைகளை அமைத்து இவர் விழாவை நடத்தினார். அதன்பிறகு விடுதி வசதி வந்தது. பட்டினத்தார் திருவிழா பட்டினத்தாரின் வரலாற்றை அடிப்படையாக வைத்து நாடகமாக இன்றும் அங்கு நடைபெற்று வருகிறது. ~ஒட்டப்பம் வீட்டைச் சுடும்| என்ற காட்சியை விவரிக்க நகரத்தார் வீடுபோலவே பொம்மை வீடு அமைக்கப்பெற்று பட்டினத்தார் வருகை தந்து ஓட்டை அப்பத்தை அதன்மீது எரிவார். வீடு பற்றி எரியும். இவ்வாறு ஒவ்வொரு காட்சியும் நாடக வடிவமாக அமைக்கப்பெறும். எனவே பற்று அறுக்கும் பட்டினத்தார் விழாவைக் கொண்டாட வைத்தவர் கண்டனூர் சார்ந்தவர் என்பது இவ்வூருக்குக் கிடைத்த பெருமை.
           
நானூறு ஆண்டுகாலமாக பழனிக்குக் காவடி கட்டி நகரத்தார்கள் பாதயாத்திரையாகச்  செல்லும் மரபு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்த யாத்திரையைத் துவக்கி வைத்தவர் கண்டனூரைச் சார்ந்த அருளாடியார் குட்டை ஐயா செட்டியார் ஆவார். இவருடன் சின்னக் கருப்பன் செட்டியாரும் துணையாகப் பழனிக்குச் சென்றுள்ளார். குட்டை ஐயா செட்டியர் வாக்கு பலிதம் மிக்கவர். மருது சகோதரர்கள், விஜயகிரி வேலாயுததுரை போன்றோர் எண்ணங்களை ஏக்கங்களை நிறைவேற்றியவர். இவரின் பணி ஐம்பதாண்டுகாலம் தொடர்ந்தது. இவர் முக்தி அடைந்த நிலையில் இவருக்கான அதிஷ்டானக் கோயில் கண்டனூரில் உருவாக்கப்பெற்றது.

பொங்கலின் போது இவருக்குப் பொங்லிடுதல், நடையாத்திரையின்  தொடக்கத்தின்போது இவரை வணங்குதல் என்பது நடைபெற்று வருகிறது. குட்டை ஐயா சுவாமிகள் அதிஷ்டானத்தில் நடைபெறும் அன்னதானம், அபிடேகம், காய்கறி அலங்காரம் மிகவும் புகழ்வாய்ந்தது.  குட்டை ஐயா சுவாமிகளுக்கு இருந்த வாக்குபலித்ம் அவரின் மரபினருக்கும் வாய்க்கும் என்று பழனியாண்டவர் அருள் பாலித்துள்ளார். இவரின் மரபினர் ஒன்பது தலைமுறையாக அருளடியார் பணியை ஆற்றி வருகின்றனர். கு.கு.ப.சு.ப.சு. சுப. பழ.பழ என்ற நிலையில் தலைமுறை தலைமுறையாக பழனி முருகனுக்கு அருளடியார் குடும்பம் அடிமைப்பட்டு இப்பணியைச் செய்துவருகிறது. இந்த ஒன்பது தலைமுறை சாமியாடிகளின் வாக்கு பலிதமாக நடைபெற்றுள்ளது. அவை  இன்றும் சத்தியமாக நின்றுவருகிறன. தற்போது அருளடியாராக இருந்து இந்த பக்தி மரபுப் பணியைச் செய்து வருபவர் அருளடியார் பழநியப்பச் செட்டியார் ஆவார். பழனி நடைபயண பக்தர்களு அருள் கூட்டுவதற்காகச் செல்லும் அருளடியார் செல்வதற்காகத் தனித்த மாட்டுவண்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும்  பழனி பாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்கள் வணங்கிச் செல்ல ஏதுவாக தண்டாயுதபாணி கோவில் வீடு பயன்படுகிறது.

                      

கண்டனூரில் நாகப்ப ஐயா சமாது, அருணாசல ஐயா மடம், முத்துராம ஐயா சாமாது, வீரப்ப ஐயா சமாது ஆகியனவும் உள்ளன. இவர்களும் முக்தி அடைந்து பத்தி நிலைக்க வைத்தவர்கள். இவர்களின் ஜீவ சமாதி அருளும் அறமும் பெருக்கி வருகின்றன.
முன்னோரை, தெய்வ அருள் பெற்றோரை வணங்கும் படைப்புகளும் இவ்வூரில் நடந்து வருகின்றன. அக்னியாத்தாள் படைப்பு, கருப்பர் படைப்பு, முத்தழகி ஆயா படைப்பு, அடைக்கம்மை ஆயா படைப்பு போன்றன குறிக்கத்தக்கன.
   
கண்டனூரின் பக்திச் சிறப்புகளுக்கு மணிமுடியாக விளங்குவது ஊரின் நடுவே அமைந்திருக்கும் நகரச் சிவன் கோவில் ஆகும்.

 இது 1892 ஆம் ஆண்டு கட்டப்பெற்றது. தற்போது 125 ஆம் ஆண்டைக் காண உள்ளது. இச்சிவன் கோவிலில் தஞ்சாவூர் ஓவியப் பாணியில் வரையப்பெற்ற அறுபத்து மூவர் படம் காணத்தக்க ஒன்று. வெள்ளி அங்கிகள், வெள்ளி வாகனங்கள் கலைநயம் மிக்கன. தற்போது இந்நகரக் கோவிலை சொக்கு சுப்பிரமணியன், அரு. கதிரேசன், அரு. சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழு நிர்வகித்து வருகிறது. 
இதன் இடப்பாகத்தில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இது நகரத்தார் மேற்பார்வையில் உள்ள கோயிலாகும். செல்லாயி அம்மன் கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது. நவராத்திரி விழாவில் இக்கோவிலின் அலங்காரம் புகழ் பெற்றது.



இத்தெய்வம் வையக்கரையில் இருந்து எடுத்துவரப்பெற்றது என்பது வாய்மொழி வழியாகக் கிடைக்கும் வரலாற்றுச் செய்தியாகும். . இக்கோயிலை வீரப்பன் அவர்கள் உட்பட்ட குழுவினர் மேற்பார்வை பார்த்து வ:ருகின்றனர்.
 வையக்கரையும் பக்தி ததும்பும் கண்டனூர் பகுதியாகும். இங்கு வையாண்டி என்ற நிலையில் சூல அடையாளம் வணங்கப்படுகிறது. இங்குள்ள கருப்பருக்கு வைகாசி மாதத்தில் பூசை நடத்தப்படுகிறது. இங்கு இருக்கும் குளம் ஒன்று அதன் தன்மையால் நோய் தீர்க்கும் குளம் என்று அழைக்கப்படுகிறது.
சிவன் கோயிலுக்கு எதிரில் உள்ள ஊருணி இவ்வூருக்கு மேலும் அழகு சேர்ப்பது. இதில் விழும் கோயிலின் ராஜகோபுர பிம்பம் கண்டு ரசிக்கத்தக்கது.

இ;வ்வூரணியின் கரையில் தற்போது தமிழக அரசு சார்பில்  கிளைநூலகம் இயங்கி வருகிறது. இதற்கான இடம் பிள்ளையார்பட்டி நகரத்தாரால் வழங்கப்பெற்றுள்ளது. இதற்கான கட்;டடத்தைச்  செல்லப்பன் செல்லப்பா நினைவாக கவிஞர் செல்ல கணபதி அவர்கள் கட்டித்தந்துள்ளார்.


 இவ்வூரில் உள்ள மற்றொரு நூலகம் அரு. ராமநாதன் நூலகமாகும். கண்டனூரைச் சார்ந்த எழுத்தாளர் அரு. ராமநாதன் - காதல் என்ற பத்திரிக்கையை நடத்தியவர். இவரின் நினைவாக இந்நூலகம் தற்போது இவர்தம் குடும்பத்தாரால் நிறுவுப் பெற்றுள்ளது.

மேலும் அரு. இராமநாதன் குடும்பத்தார் சார்பாக இந்நூலகத்திற்கு எதிரில் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க் சத்திய தருமசாலை நிறுவப் பெற்றுள்ளது. இதன் வழியாக நன்பகலில் பசியாற்றும் பணி நடைபெறுகிறது. இதுதவிர  தண்ணீர் வழங்கல், பால் வழங்கல் போன்ற செயல்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.  
சிவன் கோவில் ஊருணியின்  கீழ்க்கரையில் உள்ளது கற்பக விநாயகர் கோயில். இதனைக் கண்டனூர் சார்ந்த பிள்ளையார்பட்டி நகரத்தார்கள் நிர்வகித்து வருகிறார்கள். சிவன் கோயில் ஊருணியும் இவர்களைச் சார்ந்ததே ஆகும். இது தவிர பெருமாள் கோயில் ஊருணி, நெல்லிமரத்து ஊருணி ஆகியனவும் கண்டனூருக்கு நீர்வளம் பெருக்கித் தருகின்றன.
 
இவ்வூரின் தெருக்கள் தேசத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது சிறப்பாகும். இந்திய விடுதலைக் காலத்தில் வ.உ.சி, மோதிலால், கஸ்தூரிபாய், திலகர், ராஜாஜி ஆகியோர் பெயரால் இவ்வூரில் வீதிகளின் பெயர்கள் அமைக்கப்பெற்றன. இதற்கு அக்கால இளைஞர்கள் விடுதலைப் போரட்டத்தில் ஈடுபட்டதே காரணம் ஆகும்.
இவ்வூரில் சீனிவாசப் பெருமாள் கோவில் சி.நெ.வீர குடும்பத்தாரால் கட்டி நிர்வகிக்கப்பெற்று வருகிறது.

 மேலும் கண்நிறைந்த பெருமாள், காசி விசுவநாதர் கோயில் என்று சைவ வைணவ மத ஒற்றுமையைப் பாராட்டும் கோயிலும் முரு. பெத்தபெருமாள் குடும்பத்தாரால் 2013 ஆம் ஆண்டு கட்டப்பெற்றுள்ளது. 

இக்கோயில் கலைவண்ணமும், இயற்கை நலமும் கூடியது. நூலகம், பசுமடம், நந்தவனம், உணவுக்கூடம், உரையரங்கக் கூடம் ஆகியன கொண்டுவிளங்குகிறது.
சண்முநாதனுக்கும் இவ்வூரில் கோயில் உள்ளது. இது நகரக்கோயிலுக்குப் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

இதனை மெ.பவெ. அழகப்பன், வி.பி தியாகராசன், லெ.சித். சப. லெ. சுப்பிரமணியன், ப.கு. அரு. லெட்சுமணன் ஆகியோர் இணைந்து கட்டினர். அவரின் பரம்பரையினர் தற்போது இதனை நிர்வகித்து வுருகின்றனர்,
பேர் சொல்லும் பிற அறங்கள்
கண்டனூர் கல்விப்பணிக்கும் பெயர் பெற்ற ஊர். 1942 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற சிட்டாள்ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியன அக்காலத்தில் செட்டிநாட்டுப் பிள்ளைகள் கல்வி அறிவு பெறச் செய்தவை என்றால் அது மிகையாகாது. அழகான கட்டிட அமைப்பு, திட்டமிட்ட இட நிர்வாகம் என்று பல மதிப்புகளுக்குப் பேர் போன அழகான பள்ளியாக சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளி விளங்கிப் புகழ் சேர்த்துவருகிறது. இதனை வீ.தெ. வீரப்பச் செட்டியார் துவக்கி வைத்தார். அவரின் மரபின் இதனைக் காத்து வருகின்றனர்.

இப்பள்ளி தவிர இராமையா குடும்பத்தினர், புதுவயல் இராம. வீரப்பன் குடும்பத்தினர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
            இவ்வூரில் மருத்துவம் செழிக்க அரசு மருத்துவமனை கட்ட இடம் தந்தவர்கள் சித.அரு குடும்பத்தார்,  சித. பழ. இராம., குடும்பத்தார், அசி.சாந. சி. சித கடும்பத்தார் ஆகியோர் ஆவர். இவ்வூரில் காந்திமதி மருத்துவமனை என்பதை வெ.சித.லெ.பழ குடும்பத்தார் நிறுவி மருத்துவப் பணி செய்துவருகின்றனர்.

           
சிவன் கோயில் அருகில் நகரத்தார் மடம் ஒன்று உள்ளது. இதில் மாப்பிள்ளை அழைப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விடம் பி;ள்ளையார்பட்டி நகரத்தார்களுக்கு உரியது. நகரத்தார்களின் தனது எனப்பட்ட நிலையில் திருமண மண்டபங்கள் சில இவ்வூரில் உள்ளன.
மயிலாடுதுறை, இராமேசுவரம், சாக்கோட்டை, குன்றக்குடி, திருக்கண்ணார் கோயில், காஞ்சிபுரம், திருத்துறைப் பூண்டி, திருத்தெங்கூர் ஆகிய இடங்களில் தெய்வப் பணி நிலையங்களை இவ்வூர் நகரத்தார்கள் செய்துள்ளனர்.
            கண்டனூரில் வேலங்குடி கோயில் தவிர்ந்த மற்ற எட்டுக் கோயில் சார்ந்த நகரத்தார்களும் வாழ்கின்றனர். இவ்வூர் பதினாறூர் வட்டகையைச் சார்ந்தது. இது பேரூராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது
            இவ்வூர் நகரத்தார்கள் விருந்து போற்றுவதில் சிறந்தவர்கள். வெள்ளிப் பாத்திர உருவாத்திற்கும், மர வேலைப்பாட்டிற்கும் சிறந்த ஊராகக் கண்டனூர் விளங்கி வருகிறது.
இலக்கிய வளம்
            இவ்வூர் பல படைப்பாளர்களை, பல படைப்புகளைப் பெற்ற ஊராகும். இவ்வூரில் வாழ்ந்த நா. பெ. நா.மு. முத்துராமையா  என்பவர் கும்பாபிடேகக் கவித்திரட்டு என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலில்  1877 ஆம் ஆண்டு முதல் 1908 வரை நடைபெற்ற மதுரை, திருப்பரங்குன்றம், திருப்பூவணம், காளையார் கோயில், திரு;வாடானை ஆகிய கோயில்களில் நடைபெற்ற கும்பாபிடேக நிகழ்வுகளைக் கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார். இவை எழுபது பாடல்களாக அமைந்துள்ளன. இது 1913 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்துள்ளது.


கண்டனூரின் நகரக்கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் மீது, சிந்நயச் செட்டியார் என்பவர் கண்டனூர் மீனாட்சியம்மைப் பாடல்  பாடியுள்ளார்.
காதல், கலைமணி, மர்மக்கதை போன்ற இதழ்களை; நடத்தியவர் அரு. ராமநாதன் ஆவார். இவரின் ராஜாராஜசோழன் நாடகம் நாடகமாவும் திரைப்படமாகவும் வெளிவந்து இவருக்குப் புகழ் ஈட்டித்தந்தது. இவர் திருச்சியில் தன் பதிப்புத் n;தாழிலைத் தொடங்கிப் பின் சென்னையில் நிலைத்தார். இவரின் பிரேமா பிரசுரம் இன்றும் நல்ல புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.
கண்டனூர் கவிஞர்கள் நிறைந்த ஊராகும். ரெ. ராமசாமி, அர.சிங்காரவடிவேலன், செல்லகணபதி, சொக்கு சுப்பிரமணியன், மீனா தமிழரசி, முத்துக்குமார் போன்ற கவிஞர்களால் கவிவளம் பெற்ற ஊர் இதுவாகும். கவிஞர் செல்ல கணபதி சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர் ஆவார்.
இவ்வூரைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும் அவரின் அண்ணன் இலட்சுமணன் அவர்களும் இணைந்து இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பை 1970 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இதன்வழி சிறந்த சிறுகதை, நூல் ஆகியவற்றுக்குப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. ப.சிதம்பரம் அவர்கள் எழுத்து  அறக்கட்டளை என்ற அமைப்பின் வழியாகத் தற்போத புதிய எழுத்தாளர்கள் படைப்பினை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
முனைவர் நாகப்பா நாச்சியப்பன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விளங்கியவர். ஆய்வாளர். வள்ளலார் சிந்தனையாளர்.

கண்டனூரில் தஞ்சாவூர் பாணி ஓவியக் கலைகளில் சிறந்தவராக விளங்குபவர் கலைமாமணி ஆவுடையப்பன், சுவாமி அலங்காரம் செய்வதில் தேர்ந்தவர் பழனிமலை, இணைய எழுத்துலகில் தனியிடம் பெற்றவர் வளவு கிருஷ்ணன், வானொலித்துறையில் பணிபுரிந்து கண்டனூர் பற்றி ஆவணங்களைச் சேகரித்து வருபவர் சொக்கு சுப்பிரமணியன். இவ்வாறு பல்வேறு துறைகளில் சிறந்தோர்களைக் கொண்ட ஊர் கண்டனூர் ஆகும்.


No comments: