Sunday, January 29, 2017

புதுவயலில் ஆறுபடை வீடு முருகன் அலங்காரம்.

புதுவயலில் இன்று பழனி பாதயாத்திரை அன்பர்கள் இணைந்து நடத்திய ஆறுபடைவீடு அலங்காரம் மிகச் சிறப்புடன் நடந்தது. வெள்ளி ஊஞ்சலில் புதுவயல் குமரன் மெல்ல அசைந்து ஆடினார். அவருக்குப் பின்னணியில் ஆறுபடை வீட்டு அலங்காரங்களில் முருகன் எழுந்தருளியிருந்தார். அரை மணி நேரத்திற்கு ஒரு அலங்காரம் என்ற நிலையில் மறைந்து மறைந்து வெளிபட்டார் முருகப்பெருமான். குறிப்பாக திருச்செந்தூர் முருகனின் அலங்காரம் சிறப்பு. பஞ்சலிங்க தரிசனமும், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அறுமுகக்கடவுளும் இணைந்திருந்த காட்சி சிறப்பு.சுவாமி மலை முருகனுக்கு முக்கடவுளர்களும் செவிசாய்த்து மந்திரம் கேட்ட காட்சியும் சிறப்பு. நகரத்தார் மண்டபத்தில் ஆறுபடை வீடு முருகர் அனைவரையும் எழுந்தருளச்செய்து அருள் பெற வைத்த இந்த இனிய நிகழ்வு பத்தாண்டுகளாக பஜனை அன்னதான் என்பதாக நடைபெற்று வந்திருக்கிறது. ஆறாம் ஆண்டில் வெள்ளி ஊஞ்சல் முருகன் பிரசன்னமானார். இப்போது ஆறுபடை வீடு முருகன் எழுந்தருளிய காட்சி மிகச் சிறப்பாக இருந்தது.
சாமியாடிச் செட்டியாரும், அரண்மனைப் பொங்கலாரும் வருகை தந்து வாழ்த்தினர்.
நீங்களும் அந்த இனிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.






















No comments: