Wednesday, October 04, 2006

புதுவயலில் உள்ள மேலப்பெருமாள் கோயில்.





புதுவயலில் உள்ள ஒரு கோயில் மேலப்பெருமாள் கோயில். அதன் அழகை இங்¢கு தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊரின் மேற்குப்புறம் உள்ள கோயில் இது. கிழக்குப் புறம் ஒரு பெருமாள் கோயில் உண்டு. அதற்கு கீழப் பெருமாள் கோயில் என்று பெயர்.
கோயில் தனியார் சொந்தமானது என்றாலும் கூட பொதுமக்களின் சொத்தாகப் பராமரிக்கப்படுவது இ¢ங்கு உள்ள சிறப்பு. இதில் ஒரு கோபால கிருஷ்ணரை எங்களின் முன்னோர் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிள்ளை பிறக்காதபோது ஒரு முறை இந்தக் கடவுளை இந்தக் கோயி¢¤லில் வைத்து வழிபட்டு, மண்சோறு சாப்பிட்டுக் குழந்தை பெற்றதாக எங்களின் வரலாறு நீள்கிறது.
கோயிலின் சிலைகள் அழகு. சுந்தரராஜப் பெருமாள் இருதேவியரின் இருக்கையோடு காட்சி தருகிறார். அடுத்து தாயார் சர்வ அலங்காரக் காட்சி, ஆண்டாளின் திவ்ய சொருபம். இவற்றோடு இங்கு ஒரு முனி கோயிலும் உண்டு.
கோயிலின் எதிரில் குளம் ஒன்றுண்டு. அதன் பிரதிபலிப்பில் கோயில் தெரிவது போல படம் எடுக்கப் பெற்றுள்ளது. வாருங்கள் புதுவயலுக்கு

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படங்கள் அருமை, பழனியப்பன் சார்!
அதுவும் ஆண்டாளின் closeup படம் மிகவும் நன்று!

செட்டிநாட்டில் ஒரு புதுவயல் தெரியும். இந்தப் புதுவயல் இடக்குறிப்பும் கொடுத்திருக்கலாமே!

நன்கு பராமரிக்கப்படுவதாகச் சொன்னது நிறைவு!

திருவடியான் said...

புதுவயல் பழனியப்பன் என்று பெயர் உங்களுக்கு..... இந்த மாதிரிப் பெயர் எல்லாம் கண்டனுர் புதுவயலில் பிரபலம் தான். நீங்க சொல்லித்தான் ஆகனும் எந்தப் புதுவயல்னு.

palaniappan said...

வணக்கம்
நீங்கள் சொல்லும் அதே கண்டனூர் புதுவயல்தான் நம்மஊர்
தங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

எனக்கு புதுவயலின் அருகே பள்ளத்தூர்தான் சொந்த ஊர். நான் நீங்கள் கல்வி கற்றதாகக் கூறும் மேலைசிவபுரியில்தான் என் மனைவியைத் தேர்ந்தெடுத்தேன். என் மனைவி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தான் பி.லிட் மற்றும் எம். ஏ. மற்றும் எம்.பில் படித்தார்கள். உங்கள் ப்ளாக்கில் படங்கள் எனக்கு சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது. நன்றி

எனது ப்ளாக் : http://sarathecreator.blogspot.com

palaniappan said...

நன்றி நண்பரே
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி
தங்கள் மனைவி எம் ஏ எம்பில் ஆகிய பட்டங்களைக் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றவர் என்பது மிக மகிழ்விற்கு உரிய செய்தி வாழ்த்துக்கள்

மேலும் ஒரு கூடுதல் செய்தி
அக்கல்லூரியில்¢ முதல்வர் பொறுப்பை வகித்த முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் என் தந்தையார் , இது குறித்து உங்கள் மனைவியார்¢ அறிந்திருக்கலாம். அப்படி அறிந்திருந்தால் அவர்களுக்கும் நன்றி.

இந்த நிலையில் அவர்கள் எனக்குப் பின் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் படித்திருக்கலாம் தொடருவோம் நன்றி
என் மற்றொரு பதிவு manidal. blogspot.com

தமிழும் கணினியும் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உங்கள் குடும்பம் சரியான குடும்பம்

தொடருங்கள்